டிரெண்டிங்கில் தி கிரே மேன்.. அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் படத்தில் தனுஷின் அட்டகாசம் காண ரெடியா?
சென்னை: அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள தி கிரே மேன் டிரைலர் இன்று வெளியாகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு வெளியிட்ட நிலையில், விடிய விடிய #TheGrayMan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் புதிய போஸ்டர்களுடன் நடிகர் தனுஷின் டெரரான போஸ்டரும் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட்டில் தனுஷ்
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அதுவும் அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ சகோதரர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார். முன்னதாக இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு தனுஷ் நடித்த பிரெஞ்ச் திரைப்படமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் அமெரிக்காவுடன்
இந்நிலையில், அடுத்ததாக தி கிரே மேன் எனும் நேரடி ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் நடிகர் தனுஷ். ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், பிளேட் ரன்னர் நடிகர் ரியான் காஸ்லிங், ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தில் நடித்த அனா டி அர்மாஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் படைப்பு
சர்வதேச ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்த பிரம்மாண்ட படத்தை 20 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கி உள்ளது. வரும் ஜூலை 22ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் அட்டகாசமான ஆக்ஷன் பேக்கட் டிரைலர் இன்று வெளியாகப் போவதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டிரைலருக்கு எதிர்பார்ப்பு
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு பிறகு கிறிஸ் எவான்ஸ் நடித்துள்ள தி கிரே மேன் படத்தை காண ஹாலிவுட் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கிடக்கும் நிலையில், தனுஷின் கதாபாத்திரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை காண இந்திய ரசிகர்களும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாக உள்ள டிரைலரை காண காத்திருக்கின்றனர்.

என்ன ரோல்
கிறிஸ் எவான்ஸ் போஸ்டருடன் Unstoppable என கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், நடிகர் தனுஷுக்கு Lethal Force என்கிற பயங்கரமான டைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளுடன் வில்லனாக இந்த படத்தில் தனுஷ் மிரட்டப் போகிறாரா? என்கிற கேள்விகளும் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











