தனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ!
சென்னை: தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு, டெல்லியில் நடந்து வருகிறது.
Recommended Video
தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இதை இயக்கியவர் ஆனந்த்.எல்.ராய்.
இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியவர். இவர், இப்போது இயக்கும் படம், அட்ரங்கி ரே.

கொரோனாவுக்கு முன்
இந்த படத்தில் தனுஷூடன், அக்ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனாவுக்கு முன் தொடங்கியது.

தடைபட்ட ஷூட்டிங்
தனுஷ், சாரா அலிகான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கொரோனா லாக்டவுனால் இதன் ஷூட்டிங் தடைபட்டது. இதையடுத்து தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்திய தனுஷ், கர்ணன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்து விட்டது. இப்போது கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தொடக்கம்
இந்நிலையில், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் தொடங்கியது. அதில் தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இந்த லுக் செம
'அட்ரங்கி ரே படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது என்று கூறியுள்ள அவர், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தனுஷ் ரசிகர்கள், சூப்பர் தலைவா, இந்த லுக் செம என்று கூறி வருகின்றன.

ஐஸ்வர்யா லட்சுமி
தனுஷ் நடிப்பில் அடுத்து ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில், ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், சவுந்தர்ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயண் இசை அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











