Dhanush: வெற்றிமாறனுக்கு நோ சொன்னது சிம்பு மட்டும் இல்ல... அந்த டாப் ஹீரோவும் தான்... ஷாக்கான தனுஷ்

சென்னை: வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது.

இதனைத் தொடர்ந்து அசுரன், விடுதலை ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கி முடித்துவிட்டார்.

இதனிடையே, வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வட சென்னை முதல் பாகத்தில் நடிக்க வெற்றிமாறன் வாய்ப்பு கொடுத்தும் இரண்டு டாப் ஹீரோக்கள் அதை மறுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

 Dhanush: Simbu and Allu Arjun refused to act in Vada Chennai and Dhanush committed

வெற்றிமாறனுக்கு நோ சொன்ன சிம்பு:வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம், மார்ச் 31ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதி, சூர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே வெற்றிமாறனின் வட சென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு வெளியானது. தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தனுஷின் அன்பு கேரக்டரும் அமீரின் ராஜன் பாத்திரமும் தான் வட சென்னை படத்தின் மேஜிக் ஆகும். ஆனால், இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் வெற்றிமாறன் முதலில் வேறு நடிகர்களை தான் தேர்வு செய்திருந்தார்.

 Dhanush: Simbu and Allu Arjun refused to act in Vada Chennai and Dhanush committed

அமீர் நடித்த ராஜன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி கமிட்டாகி பின்னர் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனுஷின் அன்பு கேரக்டரில் நடிக்க சிம்புவிடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினாராம் வெற்றிமாறன். ஆனால், அப்போது சிம்புவின் உடல் எடை அதிகமாக இருந்ததால் அவர் நடிக்க மறுத்துள்ளார். அதன்பின்னரும் கூட இன்னொரு நடிகரிடம் சென்றுள்ளார் வெற்றிமாறன்.

அவர் வேறு யாருமில்லை, புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் தான் அவர். வட சென்னை கதையை கேட்டதும் அன்பு கேரக்டரில் ரொம்பவே கனெக்ட் ஆகியுள்ளார் அல்லு அர்ஜுன். ஆனாலும், வட சென்னை படத்தில் நடிக்க வேண்டுமானால் அந்தப் பகுதி மக்களை நன்றாக உள்வாங்க வேண்டும். தனக்கு அப்படியான அனுபவம் இல்லாததால், வட சென்னை அன்புவாக யதார்த்தமான நடிப்பை கொடுக்க முடியாது என அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டாராம்.

 Dhanush: Simbu and Allu Arjun refused to act in Vada Chennai and Dhanush committed

அதன்பின்னரே வழக்கம் போல தனுஷிடம் சென்றுள்ளார் வெற்றிமாறன். இருப்பினும் தனக்கு முன்பே வெற்றிமாறன் சிம்பு, அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னதை கேட்டு, தனுஷ் கொஞ்சம் ஷாக்காகிவிட்டாராம். வட சென்னை முதல் பாகத்தில் தனுஷின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. அதேநேரம் இரண்டாம் பாகம் அன்புவின் எழுச்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X