Anushka - அனுஷ்காவின் இரண்டாவது இன்னிங்ஸ்.. களத்தில் இறங்கிய தனுஷ்

சென்னை: Anushka (அனுஷ்கா) நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகிவரும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் தனுஷ் இணைந்திருக்கிறார்.

யோகா டீச்சராக இருந்த அனுஷ்கா சூப்பர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2005ஆம் ஆண்டு அறிமுகமான அனுஷ்கா தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் உருவானது.

Dhanush Sing a song in anushkas miss shetty mr polishetty

அருந்ததி அனுஷ்கா:

பல படங்களில் நடித்தாலும் அவருக்கென்று ஒரு திருப்புமுனை வராமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் வெளிவந்தது அருந்ததி. அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டினர். மேலும் நிச்சயம் இன்னும் பல வருடங்களுக்கு முன்னணியில் இருப்பார் எனவும் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை ஆரூடமும் கூறினர்.

தமிழில் அறிமுகமான அனுஷ்கா :

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவன் நடித்த இரண்டு படம் மூலம் என்ட்ரி ஆனார். இதனையடுத்து விஜய்யுடன் அவர் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித்துடன் என்னை அறிந்தால் விக்ரமுடன் தாண்டவம், ரஜினியுடன் லிங்கா, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சிம்புவுடன் வானம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார்.

Dhanush Sing a song in anushkas miss shetty mr polishetty

பாகுபலி எனும் பிரமாண்டத்தில் அனுஷ்கா:

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக அனுஷ்காவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் இரண்டாவது பாகத்தில் அனுஷ்காவுக்கு பெரும் ஸ்பேஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அவர் நடிப்பில் அசத்தினார். படமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டானதால் அனுஷ்காவும் மிக பிரபலமானார்.

அனுஷ்காவின் செயலால் பறிபோன வாய்ப்புகள்:

இதனையடுத்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன் பிறகு அதனை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதனால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் அனுஷ்கா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

Dhanush Sing a song in anushkas miss shetty mr polishetty

அனுஷ்காவின் புதிய படம்:

இந்தச் சூழலில் அனுஷ்கா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்துக்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார் அனுஷ்கா. ராதா இசையமைப்பில், மகேஷ் பாபு என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் இணைந்த தனுஷ்:

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் அனுஷ்கா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடவிருக்கிறார். ஹதாவிடி என்று தொடங்கும் பாடலை தனுஷ்தான் பாடவிருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக சச்சினுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாடலில் தனுஷும், அனுஷ்காவும் இணைந்து நடனமாடியிருந்தனர். அதனை தனுஷ் பாடியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X