இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல்... 4 மணிநேரம் ஆச்சாம்
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் விடுதலை.
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் சிறப்பான ஒரு பாடலை பாடியுள்ளார்.

விடுதலை படம்
நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் விடுதலை. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சூரி நாயகன்
படத்தின் நாயகனாக சூரி நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவரும் வெற்றிமாறன், இந்தப் படத்திலும் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

சூரி, விஜய் சேதுபதி கூட்டணி
காமெடியில் மட்டுமின்றி கேரக்டர் ரோல்களிலும் தான் சிறப்பாக நடிப்பேன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருபவர் சூரி. அவர் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கூடுதலாக விஜய் சேதுபதியும் உள்ளதும் வரவேற்பை பெற்றுள்ளது.

சவாலான சூட்டிங்
காடுகளிலும் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கை எடுப்பது மிகுந்த சவாலாக இருந்ததாக முன்னதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் முதலில் விஜய் சேதுபதியை கொண்டு 8 நாட்களுக்கே சூட்டிங் திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் தொடர்ந்து மேலும் 20 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இளையராஜா இசை
இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தனுஷ் பாடல்
இந்தப் பாடலை நடிகர் தனுஷ் சிறப்பாக பாட, இளையராஜா 4 மணிநேரம் தனுஷிற்கு சொல்லிக் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சூர்யா படத்தில் வெற்றிமாறன்
இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு வெற்றிமாறன், தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், வாடிவாசல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











