ஹாலிவுட்டுக்கு போனாலும் தமிழன்டா.. இங்கிலீஷுல லவ்சு பண்ணும் தனுஷ்.. வைரலாகும் ஏய் காத்தே எதிர்காத்தே

பக்கிரி படத்திற்காக 'இங்கிலீஷு லவ்சு' எனும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

Recommended Video

Dhanush's Next Movie Update - 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ்

சென்னை: பக்கிரி படத்திற்காக தனுஷ் பாடிய 'இங்கிலீஷு லவ்சு' பாடல் யூடியூபில் டிரெண்டிங்காகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'எக்ஸ்டாடினரி ஜெர்னி ஆப் ஃபாக்கிர்'. காமெடி திரைப்படமான இது தமிழில் பக்கிரி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

Dhanush sings Englishu Lovesu for Fakkir

இந்த படத்திற்காக இங்கிலீஷு லவ்சு எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளார். அமித் திரிவேதி இசையில், மதன் கார்கி வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். இதுவரை இப்பாடலை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

'இங்கிலீஷு லவ்சு' பாடலுக்கு தனுஷின் குரல் வெகுவாக பொருந்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ள ஜொனிதா காந்திக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரிப்பீட் மோடில் பாடலை கேட்பதாக ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X