twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டுக்கு போனாலும் தமிழன்டா.. இங்கிலீஷுல லவ்சு பண்ணும் தனுஷ்.. வைரலாகும் ஏய் காத்தே எதிர்காத்தே

    பக்கிரி படத்திற்காக 'இங்கிலீஷு லவ்சு' எனும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

    |

    Recommended Video

    Dhanush's Next Movie Update - 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ்

    சென்னை: பக்கிரி படத்திற்காக தனுஷ் பாடிய 'இங்கிலீஷு லவ்சு' பாடல் யூடியூபில் டிரெண்டிங்காகி வருகிறது.

    தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'எக்ஸ்டாடினரி ஜெர்னி ஆப் ஃபாக்கிர்'. காமெடி திரைப்படமான இது தமிழில் பக்கிரி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

    Dhanush sings Englishu Lovesu for Fakkir

    இந்த படத்திற்காக இங்கிலீஷு லவ்சு எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளார். அமித் திரிவேதி இசையில், மதன் கார்கி வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

    நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். இதுவரை இப்பாடலை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

    அஜித் சார் மீது எனக்கு மரியாதை இருக்கு.. ப்ளீஸ், தப்பான செய்தியை பரப்பாதீங்க: எஸ்.ஜே.சூர்யா அஜித் சார் மீது எனக்கு மரியாதை இருக்கு.. ப்ளீஸ், தப்பான செய்தியை பரப்பாதீங்க: எஸ்.ஜே.சூர்யா

    'இங்கிலீஷு லவ்சு' பாடலுக்கு தனுஷின் குரல் வெகுவாக பொருந்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ள ஜொனிதா காந்திக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரிப்பீட் மோடில் பாடலை கேட்பதாக ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.

    Read more about: dhanush தனுஷ்
    English summary
    Actor Dhanush's Englishu lovesu song from his 'Extraordinary journey of Fakkir' tamil remake is trending at #12 in youtube.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X