'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார்.
நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் சோனம்கபூர் ஹீரோயின்.
இதை இயக்கியவர், ஆனந்த்.எல்.ராய். இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

நடிகை சாரா அலிகான்
இவர் இப்போது இயக்கும் படம், அட்ரங்கி ரே. இந்தப் படத்தில் தனுஷூடன், அக்ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார்.

அழுத்தமான கேரக்டர்
இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று நடிகை சாரா அலிகான் விளக்கம் அளித்தார். 'ஸ்கிரிப்டை படித்தபோது தயக்கமாக இருந்தது. அழுத்தமான கேரக்டர். என்னால் முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன் என்று கூறியிருந்தார்.

லாக்டவுன் காரணமாக
படத்தில், சாரா அலிகான் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கியது. வாரணாசியில் தனுஷ், சாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கொரோனா காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஷூட்டிங் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

சோசியல் மீடியா
இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் தனுஷ், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவர் இசையில் முதன் முறையாக பாடியது பற்றியும் பேசியது பற்றியும் சோசியல் மீடியாவில் பதிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.

அடுத்த அவதாரம்
இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனராகவும் இருக்கிறார். அவருடைய அடுத்த அவதாரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











