twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருச்சு... இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தனுஷை மராத்தியில் பாடவைத்த இளையராஜா!

    சென்னை : நடிகர் தனுஷ் இளவயதிலேயே சினிமாவின் பல துறைகளிலும் புகுந்து பல சாதனைகள் செய்துவிட்டார். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

    அண்மையில் 'ப.பாண்டி' படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதோடு அவர் ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் பாடிய பாடல்கள் செம் ஹிட்டாகியுள்ளன. தற்போது இளையராஜவின் இசையில் மராத்தி மொழியில் ஒரு பாடலை பாடவுள்ளாராம் தனுஷ்.

    தனுஷ்

    தனுஷ்

    தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். நடிகரையும் தாண்டி, தயாரிப்பாளர், இயக்குநர் என பிரபலமான தனுஷ், பாடகரும் கூட.

    பாடகர்

    பாடகர்

    அனிருத் கூட்டணியில் இவர் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகளவில் பிரபலமானது. தமிழில் 'காதல் என் காதல்', 'ஜோடி நிலவே' உள்ளிட்ட ஹிட்டான சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

    மாரி 2

    மாரி 2

    தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில் இதற்கான பாடல் பதிவு நடந்ததை தனுஷ் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

    இன்ப அதிர்ச்சி

    இன்ப அதிர்ச்சி

    இந்நிலையில் தனுஷுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இளையராஜா. மராத்தியில், அமோல் படவ் இயக்கும் 'பிலிக்கர்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.

    பாக்கியம் கிடைத்திருக்கிறது

    பாக்கியம் கிடைத்திருக்கிறது

    சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எப்போது இளையராஜா இசையில் பாடுவீர்கள் என்று கேட்டார், அதற்கான பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய தனுஷூக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

    English summary
    Actor Dhanush has made many achievements in cinema. He shown his talents in many deimensions like Actor, singer, director and producer. Now, Dhanush is to sing a song in the Marathi language for Ilayaraja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X