ஜிவி பிரகாஷ்க்காக தனுஷ் பாடும் டாடா பாய் பாய் சாங்!
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாட உள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்பொழுது நடிகராக கைநிறைய படங்களுடன் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் முதல் பாடலை நடிகர் தனுஷ் பட உள்ளதாக ஜீவி பிரகாஷ்குமார் அறிவித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி
தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் காமெடி படங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது. ரசனைகள் தலைமுறைகளுக்கு தகுந்தவாறு மாறுமே தவிர ரசிகர்கள் மாறுவதில்லை. அதனை சரியாக புரிந்து கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ் சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக கால்பதித்தார்.

ஹேட்டரிக் வெற்றிகளை
ஜீவா, சந்தானம் கலக்கல் காம்போவில் உருவாகியிருந்த சிவா மனசுல சக்தி படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் மூலமும் அனைவரையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தார் இயக்குனர் எம் ராஜேஷ். பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என வெற்றி படங்களை கொடுத்த பிறகு இவர் இயக்கிய அனைத்து படங்களும் சுமாரான வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து வருகிறது.

கடவுள் இருக்கான் குமாரு
மீண்டும் பழையபடி பேர் சொல்லும் அளவிற்கு வெற்றியை தர வேண்டும் என சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வந்த இவர் இப்பொழுது கடவுள் இருக்கான் குமாரு படத்திற்குப் பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் புதிய படத்தில் இணைந்து உள்ளார். நடிகை அமிர்தா ஐயர் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் பாடுகிறார்
கிட்டதட்ட 80 சதவீத படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததாக சொல்லப்படும் நிலையில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக இந்த படத்தின் முதல் பாடல் "டாடா பாய் பாய்"
நடிகர் தனுஷ் பாடுகிறார் என்ற சூப்பரான தகவலை ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது வெளியிட்டுள்ளார். தனுஷ் பாடிய பல பாடல்கள் ஹிட்டடித்த நிலையில் அந்த வரிசையில் "டாடா பாய் பாய்" பாடலும் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











