தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’

சென்னை: 'ரகிட ரகிட ரகிட' பாடல் ஹிட்டானதில் செம குஷியில் இருக்கிறார் நடிகை சஞ்சனா நடராஜன்.

Recommended Video

Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

கிட்டத்தட்ட திரைத் துறைக்கு நடிக்க வந்து 6 வருடங்கள் ஆனாலும், இவருக்கு ஒரு சில படங்கள் மட்டுமே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நோட்டா படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு எதிரணியில் அரசியல் பேசும் காட்சிகளில் சமீபத்தில் பாராட்டுக்களை அள்ளி இருந்தார் சஞ்சனா நடராஜன்.

சஞ்சனா நடராஜன்

சஞ்சனா நடராஜன்

கடந்த 2014ம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நாயகி பியாவின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா நடராஜன். சென்னை பெண்ணான இவர், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துள்ளார். இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸிங் மாணவியாக நடித்து கவனம் பெற்றார்.

கவனம் ஈர்த்த ரோல்

கவனம் ஈர்த்த ரோல்

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான As I'm suffering from Kadhal வெப்சீரிஸில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் கல்லூரி மாணவியாக சஞ்சனா நடித்திருந்தார். நோட்டா படம் தான் இவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரத்தை அளித்திருந்தது.

கலாவதி வரதராஜன்

கலாவதி வரதராஜன்

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கலக்கிய விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமான படம் தான் நோட்டா. இந்த படத்தை இருமுகம் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி இருந்தார். 'பட்டாஸ்' மெஹ்ரின் பிர்சடா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்தில், கலாவதி வரதராஜன் எனும் எதிரணி தலைவரின் மகளாக அரசியல் வசனங்களை பேசி வலுவான கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் மிரட்டி இருப்பார்.

தனுஷுடன்

தனுஷுடன்

இந்நிலையில், தற்போது நடிகை சஞ்சனா நடராஜனுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடா மீசை வைத்து மதுரை சுருளியாக தனுஷ் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு இவர் தான் ஜோடி. கொஞ்சம் நேரமே வந்தாலும் பவர்ஃபுல்லான ரோல் தானாம்.

சிட்டி ரோபோ மாதிரி

சிட்டி ரோபோ மாதிரி

இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் போர்டல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை சஞ்சனா நடராஜன், தனது கதாபாத்திரம் குறித்து, எந்தவொரு தகவலையும் வெளியிடாத நிலையில், தனுஷ் உடன் நடித்த அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டார். தனுஷ் சார், சிட்டி ரோபோ மாதிரி, அவரோட மொத்த ரோலையும் முழுமையா ஸ்பீடா கிரகித்துக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.

எப்படி கிடைத்தது

எப்படி கிடைத்தது

கார்த்திக் சுப்புராஜ் சார் அலுவலகத்துக்கு பலமுறை ஏறி இறங்கியிருக்கேன், ஆனால், சரியான வாய்ப்பு எனக்கு கிடைக்கலை. திடீரென அவரது தயாரிப்பில் உருவான வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். பின்னர், ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் தேர்வு நடப்பதை அறிந்து, முயற்சி செய்தேன், அவரும் வெப்சீரிஸில் என் நடிப்பை பார்த்து விட்டு, ஆடிஷன் வச்சார். பின்னர், எல்லாமே ஓகே ஆகிடுச்சு, கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் படத்தில் நடிக்க கிடைச்ச வாய்ப்பு எப்போதுமே மெமரியா இருக்கும் எனக்கு என சஞ்சனா நடராஜன் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான ரகிட ரகிட ரகிட பாடலில், வரும் இவரது அந்த ஒரு ஃபிரேம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X