தினமும் சண்டைதான்.. தனுஷின் அக்கா போட்டிருக்கும் போஸ்ட்டை பாருங்க.. சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்


சென்னை: தனுஷ் இப்போது குபேரா படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை சேகர் கம்முல்லா இயக்கிவருகிறார். மேலும் தனது 50ஆவது படமான ராயனை இயக்கியிருக்கும் தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்குகிறார். இவை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக் உள்ளிட்டவைகளில் நடிக்கிறார். இந்தச் சூழலில் அவரது அக்கா கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் போஸ்ட் ட்ரெண்டாகியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Dhanush Sister Karthiga Instagram post gone trending on Social media

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார். அடுத்ததாக தனுஷ் சேகர் கம்முல்லா படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படமான ராயனையும் அவர் இயக்கியிருக்கிறார். படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. ஃபர்ஸ்ட் சிங்க்ள் ரிலீஸான சூழலில் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

தனுஷ் குடும்பம்: இதற்கிடையே தனுஷுக்கு மொத்தம் இரண்டு அக்காக்கள். அவர்களில் ஒருவரான கார்த்திகா பிரபலமான மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். அவருக்கு மருத்துவம் படிக்க சீட் வாங்கிக்கொடுத்தது விஜயகாந்த் என்பது நினைவுகூரத்தக்கது. கார்த்திகா மருத்துவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் போஸ்ட்: இந்நிலையில் கார்த்திகாவும், கார்த்திக்கும் தங்களது 19ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். அதுகுறித்து கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நமக்கு திருமண வாழ்த்துகள் கார்த்திக். ஒன்றாக 26 ஆண்டுகள்.. திருமணமாகி 19 ஆண்டுகள். ஒருநாள்கூட நமக்குள் சண்டை இல்லாமல் போனது கிடையாது. நமது சண்டைகள் இல்லாமல் நான் இல்லை என்பது புரிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுக்கு ராதிகா உள்ளிட்டோர் தங்களது வாழ்த்தை தெரிவித்திருக்கின்றனர்.

பிரிந்த தனுஷ்: முன்னதாக தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிறகு பிரிவில் நின்றது. இப்போது இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X