சிவா.. அவ்வளவு ஈஸியா என்னோட இடத்தை கொடுக்க மாட்டேன்.. இங்க வர ரொம்ப கஷ்டபட்டிருக்கேன் - தனுஷ் பேச்சு

சென்னை: தமிழ் சினிமாவில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படங்கள் குறித்த பேச்சுகள் எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவிற்கு அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த குறிப்பாக சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் பேசியது, நடிகர் தனுஷை மனதில் வைத்துதான் பேசியுள்ளார் என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று அதாவது ஆகஸ்ர் 13ஆம் தேதி கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத்ராஜ். இவரது இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்தப் படத்துடன் இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை படமும் ரிலீஸ் ஆவதால் இந்த இரண்டு படங்களும் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தா அமையும் என பேசப்பட்டு வந்தது. ஆனால் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேச்சால், பெடும்பாலானோரின் கவனமும் பேச்சும், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான பிரச்னை குறித்து பேசுபொருளாக மாறியுள்ளது.

Dhanush Sivakarthikeyan Kottukkaali

சிவகார்த்திகேயன்: கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், " யாரையும் கண்டுபிடித்து; இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

என்னோட இடம்: சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் எவ்வாறு உதவினார் என சிவகார்த்திகேயனே பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவற்றை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், "சிவா.. என்னோட இடத்த அவ்வளவு ஈஸியா விட்டுக்கொடுத்திட மாட்டேன். இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். எனக்குனு ஒரு சின்ன இடம் தமிழ் சினிமாவுல இருக்கு. சுமாரான நடிகரா இருக்கேன். ஒரு 10 வருஷம் கழிச்சு எடுத்துக்காங்க. இப்போ எனக்கு வேணும்" என சிரித்துக்கொண்டு பேசியுள்ளார். இந்த வீடியோவை இணையவாசிகள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Dhanush Sivakarthikeyan Kottukkaali

பதிலடி: ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் பேச்சு தனுஷைத்தான் குறிக்கிறது என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் தனுஷின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கினர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ஒரு வீடியோவை அதிகம் ஷேர் செய்துவருகின்றனர். சில வருடங்களுக்கு தனுஷ் அளித்திருந்த பேட்டியில், "யாரும் என்னிடம் நன்றியாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் எந்த உதவியையும் செய்யவில்லை. அப்படி யாரும் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" எனக் கூறியிருந்தார். இதனை ஷேர் செய்து, சிவகார்த்திகேயனுக்கு அப்போவே தனுஷ் பதிலடி கொடுத்துவிட்டார் என்று தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X