Dhanush: லோகேஷுக்கு சவால்விடும் தனுஷ்... AR ரஹ்மான் இசையில் மல்டி ஸ்டார்ஸ்... மிரட்டும் D50 காம்போ

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

அதேநேரம் தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள D 50 படத்தின் மாஸ் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

 Dhanush: SJ Suryah and Sundeep Kishan were roped in to play the brother role of Dhanushs D 50

மிரட்டும் தனுஷின் D 50 காம்போ:தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

அதேநேரம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தை இயக்கவும் தனுஷ் ரெடியாகிவிட்டார். ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், இரண்டாவதாக D 50 படத்தை இயக்கவுள்ளார். இதில், அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

 Dhanush: SJ Suryah and Sundeep Kishan were roped in to play the brother role of Dhanushs D 50

ஆனால், தனுஷ் தனது D 50 படத்தை வடசென்னை பின்னணியில் எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென அவர் மறுத்துவிட்டாராம். இதனால் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை கமிட் செய்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ், ஏஆர் ரஹ்மான், தனுஷ் என ஆரம்பமே அமர்க்களமாக, இப்போது இன்னும் சில பிரபலங்கள் D 50 படத்தில் இணைந்துள்ளனர்.

அதன்படி, எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவுள்ளார்களாம். ஏற்கனவே விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் கமிட்டாகிவிட்ட நிலையில், தற்போது எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷனும் இணைந்துள்ளனர். அதேபோல், துஷாரா விஜயனும் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கேப்டன் மில்லர் படப்பிடிப்பு முடிந்ததும், D 50 ஷூட்டிங் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Dhanush: SJ Suryah and Sundeep Kishan were roped in to play the brother role of Dhanushs D 50

மல்டி ஸ்டார்ஸ் படங்களில் லோகேஷ் தான் கோலிவுட்டின் தனி அடையாளமாக இருக்கிறார். மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பெரும் நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்குகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அதே ஃபார்முலாவில் தனுஷும் தனது 50வது படத்தை இயக்கவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X