மனைவியை பிரிந்த நிலையில் மகனுடன் தனுஷ்.. நானே வருவேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சந்திப்பு!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்த நிலையில், அப்பா தனுஷை ஷூட்டிங் ஸ்பாட்டில் மகன் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் படப்பிடிப்பில் தற்போது தனுஷ் பிசியாகி உள்ளார்.

இந்நிலையில், தான் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு

கடந்த ஜனவரி 17ம் தேதி ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இவர்கள் இருவரும் பிரிய பல்வேறு காரணங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல யூகங்கள் கிளம்பி வருகின்றன.

பசங்களுக்கு தான் பாதிப்பு

பசங்களுக்கு தான் பாதிப்பு

17 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்ததை முடிந்ததாக அறிவிக்க நடிகர் தனுஷ் 17ம் தேதியையே தேர்வு செய்துள்ளார் என்றும் அதற்கும் நெட்டிசன்கள் டீகோட் செய்து வரும் நிலையில், இருவரது பிரிவால் ரொம்பவே பாதிக்கப்பட போவது இவர்களின் இரு மகன்கள் தான் என்றும் பலரும் வருத்தம் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

அப்பாவை சந்தித்த மகன்

அப்பாவை சந்தித்த மகன்

இந்நிலையில், தற்போது மகன் யாத்ரா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவே ஹேப்பியாக ஷேர் செய்துள்ளார் நடிகர் தனுஷ். மகனின் தலையை கோதிவிட தனுஷ் முயல்வது போல உள்ள அந்த புகைப்படம் ஒரு மணி நேரத்திற்குள் 3 லட்சம் லைக்குகளை கடந்து காட்டுத் தீ போல பரவி வருகிறது.

ஊட்டியில் ஷூட்டிங்

ஊட்டியில் ஷூட்டிங்

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் இரு வேடங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது ஊட்டியில் முகாமிட்டுள்ளார். தனுஷின் மகன் யாத்ரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று அப்பாவை சந்தித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்பாவையும் அம்மாவையும் மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மகன்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரதர்ஸ்

பிரதர்ஸ்

இந்த புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அப்பா மகன் போலவே தெரியல பிரதர்ஸ் ரெண்டு பேரும் இருப்பது போல உள்ளதாக ஹார்ட்டின்களை பறக்கவிட்டு புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். மேலும், மாறன் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பையும் வெளியிட சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X