வாத்தி படத்தை தியேட்டரில் பார்த்த தனுஷ் மகன்.. ரசிகர்களிடம் சிக்காமல் இருக்க என்னவொரு ஓட்டம்!

சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து விட்டு நடிகை ராஷி கன்னாவை பிடித்துக் கொண்டு நடிகர் தனுஷ் ரசிகர்களிடம் சிக்காமல் ஓடிய ஓட்டம் வீடியோவாக வெளியாகி காட்டுத்தீயாக பரவியது.

இந்நிலையில், தற்போது அப்பா நடித்துள்ள வாத்தி படத்தை தியேட்டரில் பார்க்க மகன் யாத்ரா ரசிகர்களிடம் சிக்காமல் ஓடி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

அப்படியே பார்க்க ஷேவ் பண்ண தனுஷே ஓடி வருவது போல உள்ளதாகவும், ரஜினி சார் மாதிரியே இருக்காரு என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வசூலில் கெத்துக்காட்டும் வாத்தி

வசூலில் கெத்துக்காட்டும் வாத்தி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி மற்றும் கென் கருணாஸ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் முதல் நாளிலேயே 12 முதல் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாத்தி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி நாள் மற்றும் சனிக்கிழமை என்பதால் நேற்றை விட இன்று வெளியிட்ட திரையரங்குகள் எல்லாமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது அப்பா நடித்த வாத்தி படத்தை பார்க்க யாத்ரா ரோகிணி தியேட்டருக்கு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாத்தி படம் பார்த்த யாத்ரா

வாத்தி படம் பார்த்த யாத்ரா

4 பாடிகார்ட்களுடன் வாத்தி படத்தை பார்க்க தியேட்டருக்கு யாத்ரா வந்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. செம க்யூட்டாக அப்படியே அப்பாவையும் தாத்தாவையும் மிக்ஸ் பண்ன கலவையாக யாத்ரா இருக்கிறார் என அவர் வாத்தி படத்தை பார்க்க வந்த வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு கண் வைத்து வருகின்றனர்.

ரசிகர்களிடம் சிக்காமல்

ரசிகர்களிடம் சிக்காமல்

ரஜினிகாந்தின் பேரன், தனுஷின் மகன் என்றால் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள். எப்படியாவது ஒரு செல்ஃபி எடுக்கவாவது முயல்வார்கள் அல்லவா, வாத்தி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த யாத்ரா ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் கையில் சிக்காமல் இருக்க தனது பாடிகார்டுகளுடன் தியேட்டர் பால்கனிக்கு ஓடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

ரஜினி தனுஷ் மிக்ஸிங்

ரஜினி தனுஷ் மிக்ஸிங்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகனான யாத்ரா அப்பா நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் என்றும் தனுஷ் போல இருக்கிறார் என்றும் ரஜினி தனுஷ் மிக்ஸிங் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அப்பா அம்மா பிரிந்தாலும்

அப்பா அம்மா பிரிந்தாலும்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தாலும், அப்பாவின் மீதுள்ள பாசத்தை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து அப்பாவுடன் சினிமா விழாக்களில் கலந்து கொள்வதும், அப்பா நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சென்று வருவதாக யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே அப்பா மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர்.

தனுஷ் ஓட்டம்

தனுஷ் ஓட்டம்

திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆன போது தியேட்டருக்கு வந்த தனுஷ் தனது மகனை விட்டு விட்டு நடிகை ராஷி கன்னாவின் கையை பிடித்துக் கொண்டு ரசிகர்கள் கூட்டத்தில் சிக்காமல் ஓட்டம் பிடித்த காட்சிகள் அப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவரது மகன் ஓடி வரும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X