தனுஷ் குடும்பத்தில் இருந்து ஒரு புதிய ஹீரோ வரப் போறாராம்.. அந்த படத்தை இயக்கப் போவது யாரு தெரியுமா?

சென்னை: கேப்டன் மில்லர் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு படம் தமிழில் தனுஷே இயக்கி நடிக்கும் ராயன் என இரு படங்களில் பிசியாக உள்ள தனுஷ் தனது குடும்பத்தில் இருந்து புதிய ஹீரோ ஒருவரை அறிமுகப்படுத்தப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளான செல்வராகவன் மற்றும் தனுஷ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷ் குடும்பத்தில் இருந்து ஒரு நடிகர் வரப் போகிறார் என்றதுமே தனுஷின் மூத்த மகன் சினிமாவில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Dhanush soon to introduce her sister soon as a hero in his directorial movie

ஆனால், தனுஷின் மகன்கள் இல்லை என்றும் தனுஷின் சகோதரியின் மகன் தான் ஹீரோவாகப் போகிறார் என்றும் ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

தனுஷின் சகோதரி மகன்: என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குநரானவர் கஸ்தூரி ராஜா. எட்டுப்பட்டி ராசா, வீரத் தாலாட்டு, என்னாசை ராசாவே, வீரம் விளைஞ்ச மண்ணு, துள்ளுவதோ இளமை, ட்ரீம்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு செல்வராகவன், தனுஷை தவிர்த்து விமலா, கார்த்திகா என இரு மகள்கள் உள்ளனர். அதில், ஒரு மகளின் மகனைத் தான் நடிகர் தனுஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த போகிறாராம்.

மதுரை அன்பு தயாரிப்பு: நடிகர் தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து பல வருடங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் மதுரை அன்புக்கு இந்த படத்தை பண்ணிக் கொடுக்கலாம் என்கிற முடிவுக்கே தனுஷ் வந்து விட்டாராம். ஆனால், தான் நடிக்காமல் தனது மருமகனை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டார் தனுஷ் என்றும் கூறுகின்றனர்.

Dhanush soon to introduce her sister soon as a hero in his directorial movie

தனுஷ் இயக்கத்தில்: பா. பாண்டி படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநரை வெளியே கொண்டு வந்த தனுஷ் ராயன் படத்தையும் இயக்கி நடிக்க உள்ளார். இந்நிலையில், அந்த படத்தை முடித்த கையோடு மருமகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படத்தையும் தனுஷே இயக்கப் போவதாகவும் அதற்கான சரியான ஒரு கதையையும் உருவாக்கி விட்டார் என்று கூறுகின்றனர்.

தனுஷை பார்த்து சினிமா ஆர்வம் கொண்ட அவரது அக்கா மகன் நடிப்பு பயிற்சியை கற்று வருவதாகவும், இன்னொரு தனுஷாகவே அவர் வருவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X