Dhanush: இந்த மூவி தான் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிய காரணமா..? செளந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்!
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே தனது 50வது படத்தை இயக்கி முடித்துவிட்டார் தனுஷ். அதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள தனுஷ், அவரது மூன்றாவது படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் தான் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிய காரணமாக இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ் பற்றி செளந்தர்யா ரஜினிகாந்த்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. கேப்டன் மில்லருடன் மோதவிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம், பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தனுஷ் தனது 50வது படத்தை முடித்துவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தனுஷே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படமாக டி 50 உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். அவரே சொந்தமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியானது.
மினிமம் பட்ஜெட்டில் முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கத்தூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டைட்டில் டீசர் தனுஷ் வாய்ஸ் ஒவரில் வெளியாகியிருந்தது. அதேபோல் இந்த டீசரின் விஷுவலும் ஃபீல் குட் மூவிக்கான டச் கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யாவின் தங்கையான செளந்தர்யா தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணவிருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
அது தான் தற்போது தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தப் படத்தின் கதை, திரைக்கதை அனைத்தையும் தனுஷ் எழுதியிருந்ததாகவும், தான் இயக்கவிருந்ததாகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். கதை நன்றாக இருந்தாலும் நடிகர்கள் தேர்வில் இருந்த குழப்பத்தால் இந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதனை தற்போது தனுஷ் முடிவு செய்துவிட்டதோடு அவரே இயக்கவுள்ளதாகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனுஷும் செளந்தர்யாவும் இணைந்து படம் பண்ணவிருந்ததால் தான், ஐஸ்வர்யா - தனுஷ் இடையே பிரச்சினை எழுந்ததாக செய்திகள் வெளியாகின. தனது தங்கை செளந்தர்யாவுடன் தனுஷ் சேர்ந்து படம் பண்ணக் கூடாது என சண்டைப் போட்டதாகவும் சொல்லப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்துவிட்டதால் அந்தப் படம் குறித்து தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது செளந்தர்யா ரஜினி சொன்னதை வைத்து பார்க்கும் போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் தான் அதுவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











