»   »  தனுஷுக்கு அடித்த லக்... ஹாலிவுட்டின் டாப் நடிகையுடன் நடிக்கிறார்!

தனுஷுக்கு அடித்த லக்... ஹாலிவுட்டின் டாப் நடிகையுடன் நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது முதல் ஆங்கிலப் படத்தில் ஹாலிவுட்டின் டாப் நடிகையுடன் ஜோடி சேர்கிறார் நடிகர் தனுஷ்.

பிரபல ஈரானிய மற்றும் ப்ரெஞ்ச் பட இயக்குநர் மர்ஜோன் சட்ராபி இயக்கும் இந்தப் படத்தில், சான் ஆன்ட்ரியாஸ் படத்தின் நாயகியான அலெக்சான்ட்ரா தத்தாரியோ நாயகியாக நடிக்கிறார்.

Dhanush speaks about his first Hollywood movie

இந்தப் படம் குறித்து தனுஷ் கூறுகையில், "முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.

நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள் கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், பத்திரிக்கை, தொலைகாட்சி மற்றும் வலைதள நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

English summary
Actor Dhanush is going to do his first Hollywood movie with Iranian film maker Marjane Satrapi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil