Dhanush: 30 படங்கள் இருக்கு.. ராயனுக்கு மியூசிக் போடுறது கஷ்டம் எனச் சொன்ன ரகுமான் - தனுஷ்!

சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அது குறித்து இங்கு காணலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

Dhanush Raayan

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது, " முதல் படத்தில் நடிக்கும் பொழுது, நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவே இல்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், உருவக்கேலிகள், துரோகங்களை தாண்டி இங்கே உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் கரவொலிதான் முக்கிய காரணம். ஒல்லியாக, கருப்பாக, இருந்த இருந்த என்னை, எப்படி நீங்கள் உங்களோடு கனெக்ட் செய்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை.

இங்கிலீஷ் சரியாக பேச தெரியாத என்னை, இங்கிலீஷ் படத்திலேயே நடிக்க வைத்தீர்கள். ராயன் படத்தின் கதையை படத்தின் தயாரிப்பாளரர் கலாநிதி மாறனிடம் நான் சொன்ன போது, எந்த ஒரு காட்சியின்போதும், எந்தவித ரியாக்‌ஷனுமே இல்லை. கலாநிதி மாறன் அப்படி இருந்ததால், எனக்குள் ஒருவேளை நம்முடைய கதை நன்றாக இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் முழுக்கதையையும் சொல்லி முடித்த பின்னர், கலாநிதி மாறன் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சாரிடம் போனில், சார் இது என்னுடைய ஐம்பதாவது படம். என்னுடைய 50வது படத்தில் உங்களுடைய பெயர் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் இரண்டு நாட்கள் கழித்து பதில் சொல்வதாகச் சொன்னார். அதேபோல இரண்டு நாட்களுக்குப்பிறகு, ரகுமான் சாரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அவர், தனுஷ் நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றேன் எனச் சொல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. ஆனாலும் நான் இந்த படத்துக்கு இசை அமைக்கின்றேன் என்று கூறினார்.

இதற்காகவே ரகுமான் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ படங்கள், எத்தனையோ விருதுகள், பாராட்டுகள் அனைத்தையும் பார்த்த பின்னரும் கூட, இப்போதும் இசையில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும்,முயற்சி செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

பிரகாஷ்ராஜ் சாருடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடிக்கும்போது, அவரைப் பார்த்து பயந்து ஓரமாக நான் நின்று கொண்டிருப்பேன். இந்தப் படத்திற்காக அவரிடம் பேசிய பொழுது, நான் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். உடனே அவர் எப்போது வர வேண்டும் என்று சொல் என்று கூறினார். படத்தின் கதையை உங்களிடம் கூறிவிடுகின்றேன் சார் என்று சொன்னதற்கு, அதெல்லாம் தேவையே இல்லை. எப்போது வர வேண்டும் என்று சொல். நான் அப்போது வருகிறேன் என்று கூறினார்" இவ்வாறு தனுஷ் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X