Dhanush: எதுக்கு உங்களுக்கு டைரக்ஷன் எனக் கேட்ட எஸ்.ஜே.சூர்யா! அது என்னை மிகவும்..மனம் திறந்த தனுஷ்
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.குறிப்பாக படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவைப் பற்றி பேசும்போது அவரைப் போலவே மிமிக்கிரி செய்து காட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது. தனது 50வது படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றவேண்டும் என்ற காரணத்திற்காக தனுஷே இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதியது மட்டும் இல்லாமல் தானே இயக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஒரு சில இடங்களில் மிகவும் எமோஷ்னலாகவும் பேசினார். தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தனுஷ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அப்போது அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து தனுஷை உற்சாகப்படுத்தினர். படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் பாடலான அடங்காத அசுரன் தான் பாடலை ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பாடினார். இருவரும் பாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

உருவக்கேலிகள்: தனுஷ் பேசுகையில் " முதல் படத்தில் நடிக்கும் பொழுது, நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவே இல்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், உருவக்கேலிகள், துரோகங்களை தாண்டி இங்கே உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் கரவொலிதான் முக்கிய காரணம். ஒல்லியாக, கருப்பாக, இருந்த இருந்த என்னை, எப்படி நீங்கள் உங்களோடு கனெக்ட் செய்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை.

எதுக்கு டைரக்ஷன்: எஸ்.ஜே. சூர்யா சாரைப்பொறுத்தவரை முதல் நாள் அவருக்கு நான் முதல் ஷாட்டை வைத்தபோது, நீங்கள் எதற்காக டைரக்ட் செய்கிறீர்கள் தனுஷ் என்று கேட்டார். உடனே முதல் நாளே இப்படி கேட்கிறீர்களே சார் எனக் கேட்டேன். அதற்கு அவர், இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போதும் எதற்காக டைரக்ஷன் என்று கேட்டார். ஆனால் அந்த வார்த்தை என்னை பயங்கரமாக உழைக்க வைத்தது.

மிமிக்கிரி: எஸ்.ஜே. சூர்யா சார் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த ஒரு மிகப்பெரிய இயக்குநர். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் நான் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும், முகம் சுழிக்காமல் அவர் எனக்காக செய்து கொடுத்தார். தனுஷ், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தொடர்பாக பேசுகையில் எஸ்.சூர்யாவைப் போலவே மிமிக்கிரி செய்து காட்டினார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த வீடியோவை தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











