twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி இன்று தலைவர்.. ஆனால் நாளைக்கு.. அப்படியே மாமனார் மாதிரியே பொடி வைத்துப் பேசிய மாப்பிள்ளை!

    காலா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சை கேட்டு ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    |

    Recommended Video

    மாத்தி மாத்தி புகழ்ந்துகொண்ட ரஜினி ,தனுஷ்- வீடியோ

    சென்னை: காலா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் பேச்சு ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

    கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    Dhanush speech in Kaala audio release function

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதில் பேசிய நடிகர் தனுஷ், இன்று தலைவராக இருக்கும் ரஜினி நாளை என்னவாகப் போகிறார் என்பது இறைவனின் கைகளில் இருக்கிறது என்றார். விழாவில் அவர் பேசியதாவது, "ரஜினி சாருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதனால் ஒரு சில சம்பவங்களை மட்டும் நினைவுகூற விரும்புகிறேன். காலா படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். 11 மணிக்கு முடிய வேண்டிய ஷூட்டிங் 2 மணி வரை நீடித்தது.

    நான் ரஜினி சாரி சென்று மெதுவாக நேரமாகிறதே பரவாயில்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை. அதுக்கு தானே வந்திருக்கிறோம் என்றார். அந்த அற்பணிப்பு அவரை இந்தளவுக்கு கொண்டுவந்துள்ளது.

    என்னிடமும் காலா கதையை கூறி சொல்லி பா.ரஞ்சித்திடன் கூறினார். இது ஒரு தயாரிப்பாளரை எப்படி மதிக்க வேண்டும் என்கிற பண்பை காட்டுகிறது.
    புகழ் அடைய இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி உழைத்த உச்சத்து வருவது. மற்றொன்று அப்படி உச்சத்தில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்து புகழ்ச்சியடைது.

    பட்ட மரம் தான் கல்லடிபடும். தன்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் அழைப்பிதழ் கொடுக்கச் சொன்னார். ரஜினி சாரின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் ஒரு வில்லன். பின்னர் குணச்சித்திர நடிகர், அப்புறம் ஸ்டைல் மன்னர், அடுத்து சூப்பர் ஸ்டார், இன்று தலைவர்.... (பலத்த கரகோஷம்) நாளை (மீண்டும் பயங்கர ஆரவாரம்)... அது இறைவன் கைகளில் இருக்கிறது." என்றார் தனுஷ்.

    பரவாயில்லையே.. மாமனார் மாதிரியே தத்துவார்த்தமாக பேசக் கற்றுக் கொண்டு விட்டாரே மாப்பிள்ளையும்!

    English summary
    While speaking in Kaala audio release function actor and producer Dhanush entertained Rajni fans by speaking about his political entry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X