தனுஷின் பட்டாஸுக்கு இதுதான் சான்றிதழ்... ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

By

சென்னை: தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம், பட்டாஸ். இதை துரை. செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இவர், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களையும் தனுஷ் நடித்த கொடி படத்தையும் இயக்கியவர்.

சினேகா, மெஹ்ரின்

சினேகா, மெஹ்ரின்

'பட்டாஸ்' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக்- மெர்வின் இசை அமைத்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜனவரியில்

ஜனவரியில்

படத்தின் மோஷன் போஸ்டர், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம்பற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், கடந்த ஜனவரியில் நாங்கள் தயாரித்த, விஸ்வாசம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த ஜனவரியில் பட்டாஸ் வெளிவருகிறது. இந்தப் படமும் வெற்றி பெறும் என்று கூறியிருந்தார்.

யு சான்றிதழ்

யு சான்றிதழ்

இந்நிலையில், இந்தப் படம் சென்சாருக்கு அனுப்பபட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், அனைவரும் பார்க்கலாம் என்று யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

15 ஆம் தேதி

படம், வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் முதலில் கூறப் பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி படம் வெளியாகிறது. இதை நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X