twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 ஆண்டுகளை எட்டிய தனுஷின் விஐபி...குவியும் வாழ்த்துக்கள்

    |

    சென்னை : 2014 ம் ஆண்டு தனுஷ், அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. விஐபி என செல்லமாக அழைக்கப்பட்ட இந்த படம் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்த படமாக உருவாக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சினேகா, பிரசன்னா!கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சினேகா, பிரசன்னா!

    புதுமுக இயக்குனரான வேல்ராஜ் எழுதி, இயக்கிய இந்த படத்தில் விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.

    சர்ச்சைகளை கடந்து சூப்பர்ஹிட்

    சர்ச்சைகளை கடந்து சூப்பர்ஹிட்

    சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி சூப்பர்ஹிட்டான இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் இந்த படத்தை தயாரித்து, விநியோகம் செய்தார். இந்த படத்தில் வாட்ட கருவாடு, அம்மா அம்மா உள்ளிட்ட பாடல்களை தனுஷ், தானே எழுதி, பாடினார்.

    வசூலை குவித்த விஐபி

    வசூலை குவித்த விஐபி

    பாக்ஸ் ஆபீசில் 150 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த இந்த படம் பிறகு தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்ற பெயரிலும், கன்னடத்தில் பிரகஸ்பதி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற விஐபி படத்தின் அடுத்த பாகம் 2017 ல் ரிலீஸ் செய்யப்பட்டது.

    அனிருத் இசையில் 10 பாடல்கள்

    அனிருத் இசையில் 10 பாடல்கள்

    வேலையில்லாத இளைஞனை பற்றிய கதை என்பதாலும், எதார்த்தமான திரைக்கதை என்பதாலும் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். துவக்கத்தில் இந்த படத்தில் 8 பாடல்கள் வைக்கப்பட்டது. ஆனால் வெளியிடும் போது கூடுதலாக 2 பாடல்களுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    பிளஸான அம்மா சென்டிமென்ட்

    பிளஸான அம்மா சென்டிமென்ட்

    தனுஷ் - எஸ்.ஜானகி குரலில் அமைந்த அம்மா சென்டிமென்ட் பாடல் படத்திற்கு மிகப் பெரிய பிளஸாக அமைந்தது. அத்துடன் வாட்ட கருவாடு பாடல் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல் உரிமத்தை சன் மியூசிக் நிறுவனம் பெற்றது.

    Recommended Video

    Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography | Filmibeat Tamil
    விஐபி சந்தித்த சர்ச்சைகள்

    விஐபி சந்தித்த சர்ச்சைகள்

    க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் தனுஷ் வாயில் சிகரெட்டுடன் நடந்து வரும் காட்சி, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி பேசும் வசனம் ஆகியன கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் சந்தித்தன. இதனைத் தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டு, பிறகு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    English summary
    Velaiilla Pattadhari popularly referred to as VIP, is a 2014 Indian action comedy film written and directed by Velraj, in his directorial debut. The film features Dhanush, Amala Paul, while Vivek, Saranya Ponvannan, Samuthirakani and Surbhi play supporting roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X