தர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்!
Recommended Video
சென்னை: தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படம், ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம், பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சினேகா, மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

விவேக்- மெர்வின் இசை அமைத்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் மோஷன் போஸ்டர், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 16 ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதுபற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறும்போது, கடந்த வருடம் ஜனவரி மாதம் நாங்கள் தயாரித்த, விஸ்வாசம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த ஜனவரியில் தனுஷ் நடிப்பில் பட்டாஸ் வெளிவருகிறது. இந்த படமும் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படி படப்பிடிப்பு நடத்தி, குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனர் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு. தனுஷ், நடிப்பில் ஓர் அசுரன் என்பதை பட்டாஸ் மீண்டும் நிரூபிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் தர்பாரும் தனுஷின் பட்டாஸும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால், ஜனவரி 9 ஆம் தேதி தர்பார் ரிலீஸ் ஆவதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஐந்து நாட்கள் கழித்து பட்டாஸ் ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











