உசுரே நீதானே.. ஏ.ஆர். ரகுமான் கான்செர்ட்டில் மும்பையை மிரட்டி விட்ட தனுஷ்.. வேற லெவல் வீடியோ!
மும்பை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இந்த படம் தனுஷ்ஷின் 50வது படம் அது மட்டும் இல்லாமல், இந்த படத்தை அவரே இயக்கினார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இவரது இசையில் உருவான பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மும்பையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் தற்போது படங்களுக்கு இசை அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ அதே அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு பணம் தான் பிரதான காரணமாக மற்றவர்கள் கூறினாலும், இசைப்புயலின் ரசிகர்கள் இசைக் கச்சேரிக்கு திரண்டு வந்து மொத்த அரங்கையும் நிரப்பி விடுகிறார்கள்.
அப்படி நேற்று அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி மும்பையில் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசைக் கச்சேரி மும்பையில் நடைபெற்றது. இந்த இசைக் கச்சேரியில் இவரது இசையில் உருவான பல்வேறு மொழிப் பாடல்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பாடல் பாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ்: அதாவது, தனுஷ் கலந்து கொண்டு பாடிய பாடல் என்றால் அது தனுஷ் இயக்கி நடித்த படமான ராயன் படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் பாடலான அடங்காத அசுரன் தான் பாடலைப் பாடினார். இந்த பாடலை படத்தில் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து பாடியுள்ளார்கள். மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதினார். ராயன் படத்தின் கிளைமாக்ஸில் வரும் இந்த பாடலை ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் தனுஷ் இணைந்து பாடினார்கள். இவர்கள் இருவரும் இணைந்து பாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
உசுரே நீ தானே: இவர்கள் இருவரும் இணைந்து இந்த பாடலைப் பாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இந்த பாடலை ஏ.ஆர். ரகுமான் தான் நடத்தும் பல கச்சேரிகளில் பாடியுள்ளார். குறிப்பாக அந்த பாடலில் இடம்பெற்றுள்ள " உசுரே நீ தானே" வரிகளை மட்டும் பாடலில் இருப்பதைப் போல் பாடமல், கச்சேரிக்கு கச்சேரி வித்தியாசமாக பாடிய வீடியோக்கள் கூட இணையத்தில் அவ்வப்போது உலா வந்தது.

கோரிக்கை: இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், எப்போது இந்த பாடலை தனுஷுடன் மீண்டும் இணைந்து பாடப் போகிறீர்கள் என்று கேட்டு வந்தார்கள். ரசிகர்களின் பல நாள் கோரிக்கையை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மிகவும் சைலண்டாக நிறைவேற்றி வைத்துள்ளார். இருவரும் மும்பையில் நடைபெற்ற கச்சேரியில் அடங்காத அசுரன் தான் பாடலைப் பாடியது ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சி தான். மேலும் இவர்கள் இருவரும் இந்த பாடலை இணைந்து பாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் நடத்தும் கச்சேரியிலும் அதேபோல் இருவரும் இணைந்து பாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











