திடீரென வெடித்த சூர்யா – தனுஷ் ரசிகர்கள் மோதல்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: தனுஷ் ரசிகர்கள் திடீரென ஹாஷ்டேக் ஒன்றை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Ellu Vaya Pookalaye | Aishwarya Dutta Fantastic Try | Lock down Challenge

மேலும், அதில், நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவதால், சூர்யா - தனுஷ் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று வாடிவாசல் ட்விட்டரில் டிரெண்டான நிலையில், தற்போது தனுஷ் ரசிகர்கள் இந்த ட்விட்டர் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

டிரெண்டிங்

காலையில் இருந்தே தனுஷ் ரசிகர்கள் #DhanushStardomrules என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா மற்றும் சிம்புவை விட நடிகர் தனுஷுக்குத் தான் தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதாகவும், தனுஷுக்கு பிறகே சூர்யா, சிம்பு என்றும் சண்டையிட்டு தங்களின் பலத்தை காட்டி வருகின்றனர்.

யார் மாஸ்?

விஜய், அஜித்துக்கு பிறகு கோலிவுட்டில் நடிகர் தனுஷுக்குத் தான் ரசிகர்கள் செல்வாக்கு இருப்பதாகவும், தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். சூர்யா மற்றும் சிம்பு, தனுஷுக்கு அப்புறம் தான் என்ற ரசிகர் சண்டை தான் தற்போது டிரெண்டாகி வரும் ஹாஷ்டேகுக்கு காரணம்.

வாடிவாசல்

தனுஷ் - வெற்றிமாறன் காம்பினேஷனில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என அனைத்து படங்களுமே மெகா ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், வெற்றிமாறன் - சூர்யா காம்போவில் வாடிவாசல் படத்தின் இசை பணிகளை ஜி.வி. பிரகாஷ் ஆரம்பித்துவிட்டதாக போட்ட ட்வீட்டை தொடர்ந்து டிரெண்டான வாடிவாசல் ஹாஷ்டேக் தான் தனுஷ் - சூர்யா ரசிகர்கள் சண்டையை தூண்டி விட்டு இருக்கிறது.

கிங் தனுஷ்

கிங் ஆஃப் கோலிவுட், கிங் ஆஃப் சோஷியல் மீடியா, நடிப்பு அரசன், நடனத்தின் வல்லவன், பாடல்கள் எழுதுவதில் கில்லாடி, இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமையைக் கொண்ட ஒரு மகா கலைஞன் தனுஷ் என்றும், கோலிவுட்டில் தனுஷ் அளவுக்கு திறமை உள்ள நடிகர்கள் யாரும் இல்லை என்றும் சில தனுஷ் ரசிகர்கள் தங்கள் நாயகனை புகழ்ந்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

யாரும் இல்லை

இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற நடிகர் என்றும், விஜய், அஜித்தை தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்த நடிகர் என்றும் தனுஷை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதே போல தனுஷை வெல்ல யாரும் இல்லை என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்ஸ்

விஜய் - அஜித் ரசிகர்கள் வரம்பு மீறி சென்று வந்த நிலையில், தற்போது தனுஷ் - சூர்யா மற்றும் சிம்பு ரசிகர்களிடையே நடக்கும் ட்விட்டர் சண்டை ஆபாச கமெண்ட்ஸ் மற்றும் மீம்களுடன் வரம்பு மீறி போய்க் கொண்டு இருக்கிறது. எல்லா நடிகர்களும், தங்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தான். அனைத்து நடிகர்களும் பல வெற்றிகளை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளனர். இந்த தேவையில்லாத ரசிகர்கள் சண்டையை இந்த நேரத்தில் போடுவது ஆரோக்கியமற்ற செயல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X