தி க்ரே மேன் படத்துல எப்படி நடிச்சேன்னு எனக்கே தெரியலை.. என்ன இப்படி சொல்லிட்டாரு தனுஷ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தி க்ரே மேன் ஹாலிவுட் படம் வரும் 22ம் தேதி சர்வதேச அளவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Recommended Video

Dhanush நன்றி தெரிவித்துள்ளார், Big Budget The Grey Man | Russo Brothers

இந்தப் படத்தில் தனுஷ் நடித்துள்ள நிலையில், அவரது போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் சிறப்பான பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழில் மட்டும் நடித்து தன்னுடைய எல்லைகளை சுருக்கிக் கொள்ளாமல் டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தன்னுடைய எல்லைகளை இவர் விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் நாயகன்

ரசிகர்கள் கொண்டாடும் நாயகன்

இதனாலேயே சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மாறன் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தி க்ரே மேன் படம் ரிலீஸ்

தி க்ரே மேன் படம் ரிலீஸ்

அவரது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட தமிழ் படங்கள் மட்டுமின்றி தற்போது அவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் வரும் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்தப் படமும் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ரூசோ சகோதரர்கள் இயக்கம்

ரூசோ சகோதரர்கள் இயக்கம்

அவெஞ்சர்ஸ் படத்தை எடுத்த ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரும் இதை உறுதி செய்துள்ளது. தனுஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சான்ஸ் தனக்கு எப்படி அமைந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார் தனுஷ்.

அமெரிக்காவில் தனுஷ்

அமெரிக்காவில் தனுஷ்

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷும் கலந்துக் கொண்டுள்ளார். இந்த பிரமோஷனில் அவரை வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் காண முடிந்தது. இது வாத்திப் படத்திற்காக அவர் மேற்கொண்டுள்ள ஹேர்ஸ்டைலா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹாலிவுட் வாய்ப்பு

ஹாலிவுட் வாய்ப்பு

இந்நிலையில் இந்தப் படத்தில் எப்படி கமிட்டாகி நடித்து முடித்தேன் என்பது குறித்து தனக்கே தெரியவில்லை என்று அவர் இந்த பிரமோஷனின்போது தெரிவித்துள்ளார். முதலில் படக்குழுவிடமிருந்து தனக்கு போன் கால் வந்ததாகவும் ஹாலிவுட் படத்தின் வாய்ப்பு குறித்து அவர்கள் பேசியதாகவும், தான் சம்மதம் கூறுவதற்கு முன்னதாகவே அவர்கள் படம் மிகப்பெரிய படம் என்றும் உடனடியாக உறுதி செய்ய கேட்டதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த தனுஷ்

பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த தனுஷ்

இதை தொடர்ந்தே தான் படம் குறித்து கேட்டதாகவும் அவர்கள் பதில் சொன்னதும் தான் வாவ் என்று துள்ளி குதித்ததாகவும் தனுஷ் கூறியுள்ளார். இதுபோன்ற பெரிய வாய்ப்புக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் இதன்மூலம் தன்னுடைய திறமையை சர்வதேச அளவில் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனுஷ் நம்பிக்கை

தனுஷ் நம்பிக்கை

அந்த அளவில் தான் படத்தில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் வரும் நிலையில், தி க்ரே மேன் படமும் வெளியாகவுள்ளது. இதனிடையே தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X