ராஜமெளலியால் கூட இதை பண்ண முடியாதேப்பா.. அதை சாதித்துக் காட்டிய தனுஷ்.. எஸ்.ஜே. சூர்யா ஓபன்!
சென்னை: ராயன் படத்தில் தனுஷ் செய்துள்ள விஷயத்தை படம் வெளியான பின்னர் ரசிகர்கள் நிச்சயம் பார்த்து மிரளப் போகின்றனர் என எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் மீது தான் அடுத்து தமிழ் சினிமா பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து சாணிக் காயிதம் எனும் படத்தை அவர் இயக்கிய நிலையில், அப்படியே தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. ஆனாலும், அருண் மாதேஸ்வரன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக இளையராஜாவின் பயோபிக்கை பாலிவுட் இயக்குநர்கள் கூட இயக்க வேண்டாம் என அருண் மாதேஸ்வரனையே இயக்க வைத்துள்ளார் தனுஷ்.
ராயன் பந்தயம் அடிக்கும்: அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என தனுஷை சுற்றி ஏகப்பட்ட இயக்குநர்கள் இருந்து வந்த நிலையில், இயக்கத்தின் மீது அவருக்கு அதிக காதல் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்கள் படங்களை இயக்கி நடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளனர். ஏற்கனவே ப. பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அடுத்ததாக ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். வெற்றிமாறனுடன் பல படங்களில் வேலை பார்த்த தனுஷ் இந்த படத்தை 'ரா'வாக எடுத்துள்ளதாக படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராமாயணம் + மகாபாரதம்: ஒரு இரண்டரை மணி நேர படத்தில் ராமாயணத்திலும் மகாபாராதத்திலும் உள்ள கீ பாயிண்ட்ஸை வைத்து ஒரு படமாக கொடுக்க முடியுமா? என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை ஸ்க்ரீன்பிளேயில் தனுஷ் அசால்ட்டாக செய்துக் காட்டியுள்ளார். ராயன் படம் வெளியானதும் ரசிகர்கள் தனுஷ் என்ன மாதிரியான டைரக்டர் என்பதை புரிந்துக் கொள்வார்கள் என சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.
கலாநிதி மாறன் ஹேப்பி: தனுஷின் ராயன் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்குங்க என்றே கலாநிதி மாறன் சொல்லும் அளவுக்கு படம் தாறுமாறாக இருப்பதாக கூறுகின்றனர். தனுஷின் 50வது படமாக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











