அனிருத்தால்தான் நான் தப்பித்தேன்.. அட தனுஷ் இப்படி ஓபனாக சொல்லிட்டாரே ப்பா
சென்னை: தனுஷ் கைவசம் இப்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. அது அவரது 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இதனால் அவரும் கொஞ்சம் அப்செட்டாகவே காணப்பட்டார். இதற்கிடையே அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையேயான விவாகரத்து மனுவில் நாளை தீர்ப்பு வரவிருக்கிறது. இந்தச் சூழலில் அனிருத் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை அவரே இயக்கி நடித்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் மோசமான விமர்சனத்தையே பெற்றது. தியேட்டரில்தான் அப்படி என்றால்; ஓடிடியில் வெளியான பிறகு மேற்கொண்டு ட்ரோல்களை சந்தித்தது. அப்படியே வடசென்னை வாடை படத்தில் பலமாகவே அடித்ததாகவும்; வானத்தைப் போல படத்தை பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சனத்தை சந்தித்தது.

அடுத்த படங்கள்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் மட்டுமின்றி தானே இயக்கி இட்லி கடை என்ற படத்திலும் நடித்துவருகிறார்.அதில் அவருக்கு நித்யா மேனன் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இவை தவிர்த்து இளையராஜா பயோபிக், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு பிஸியாக இருக்கிறார்.
இயக்குநராகவும் பிஸி: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் படு பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்திலிருந்து இதுவரை கோல்டன் ஸ்பேரோ, காதல் ஃபெயில் ஆகிய இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நிச்சயமாக தனுஷின் பெயர் சொல்லும் படமாக இது அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
சர்ச்சைகள்: இப்படி தனது கரியரில் உச்சக்கட்ட பிஸியாக இருக்கும் தனுஷை சுற்றி சர்ச்சைகளும் வலம் வருகின்றன. சமீபத்தில்கூட நயன்தாரா தனது ஆவணப் படம் விவகாரம் தொடர்பாக தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர்த்து நாளை தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் தீர்ப்பும் வரவிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் குறித்து தனுஷ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் பேச்சு: சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு நிகழ்ச்சியில் அனிருத் பற்றி பேசுகையில், “என்னைத்தான் முன்பெல்லாம் ஒல்லி நடிகர் என்று எழுதுவார்கள். ஆனால் அனிருத் வந்த பிறகு அப்படி என்னை யாருமே எழுதுவதில்லை. ஏனெனில் அனிருத் என்னைவிடவும் ஒல்லியாக இருக்கிறார். அதனால் நான் தப்பித்தேன். என்னதான் நாங்கள் ஒல்லியாக இருந்தாலும் இருவருமே வேலை விஷயத்தில் கில்லிதான்” என்றார். முன்னதாக அனிருத்தை சினிமாவில் இசையமைப்பாளராக தனுஷ்தான் அறிமுகப்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











