எல்லாத்துக்கும் காரணம் ஐஸ்வர்யாதான்.. என்ன தனுஷ் இப்படி போட்டு உடைச்சிட்டாரு?.. ட்ரெண்டாகும் பேட்டி

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் தனக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்று விண்ணப்பிக்கவும் செய்திருக்கிறார்

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

Dhanush Talks about Her Ex Wife Aishwarya Rajinikanth at Interview

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார் தனுஷ்

பிரிவில் திருமணம்: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2022ஆம் ஆண்டு பிரிவில் முடிந்தது. இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது.

விண்ணப்பம்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவருமே தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் குடும்பத்தை ரஜினியின் குடும்பம் அவமதித்ததே இந்த கருத்து வேறுபாட்டுக்கான ஆரம்பப் புள்ளி என்ற புதிய தகவலும் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து தனுஷ் அளித்திருக்கும் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் வேஷ்டி சட்டை போட்டால் நன்றாக இருக்கும் என்று எனது மனைவி சொன்னார். அதனால்தான் வேஷ்டி சட்டை அணியும் பழக்கம் ஏற்பட்டது. எனக்கும் இது ரொம்பவே பிடித்துவிட்டது. அதேபோல் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அந்தப் பழக்கமும் ஐஸ்வர்யா சொல்லிதான் வந்தது. இப்படி பெரும்பாலான பழக்கங்களுக்கு ஐஸ்வர்யாதான் காரணம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X