2 பசங்களும் பாவம்.. என் மனைவி ரொம்ப உஷார் ஏமாத்தவே முடியாது.. தனுஷ் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். அவரே இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நட்சத்திர பட்டாளத்தின் துணை என பல இருந்தும் படம் சொதப்பியது தனுஷுக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.
தமிழ் சினிமாவில் உருவ கேலியை சந்தித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் அதிகம் சந்தித்தவர் என்றால் அவர் தனுஷ்தான். துள்ளுவதோ இளமை படத்தில் அவர் அறிமுகமானபோது இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்று பலரும் அவரது காதுபடவே பேசினார்கள். ஆனால் அந்த வயதிலும் பக்குவத்தோடு அதை கடந்து சென்று திறமையை மட்டும் வளர்த்து இன்று தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். அந்தவகையில் தனுஷை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

ராயன்: அவர் கடைசியாக ராயன் படத்தில் நடித்தார். தனது 50ஆவது படமான அதை தானே இயக்கவும் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு காரணம் படத்தின் கதையும், ஸ்க்ரீன் ப்ளேவும். இரண்டும் வடசென்னை உள்ளிட்ட படங்களை நினைவுப்படுத்தியதாக ரசிகர்கள் கூறினர்.
ரஜினி வீட்டு மருமகன்: இதற்கிடையே காதல்கொண்டேன் படத்தில் நடித்ததற்காக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை பாராட்டினார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு ரஜினியின் வீட்டில் முதலில் சம்மதம் கிடைக்காவிட்டாலும் பிறகு சம்மதம் கிடைத்ததால் அவர்களது திருமணம் நடந்தது. அவர்களின் திருமணம் நடந்தபோது ரஜினி வீட்டுக்கு தனுஷ் மருமகனா என்று பலரும் வாயை பிளந்தார்கள்.
மனைவியை பிரிந்த தனுஷ்: அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவும் 3 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்கள் தோல்வியுற்றன. சூழல் இப்படி இருக்க பல வருடங்களாக சுமூகத்தில் இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும்; விரைவில் இரண்டு பேரும் சேர்ந்துவிடுவார்கள் என்றே இருதரப்புக்கும் நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தனுஷ் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அனேகன் பட சமயத்தில் தனுஷ் அளித்த பேட்டியில், "எனது இரண்டு பசங்களும் என்னைப் போல்தான் உருவத்தில் இருக்கிறார்கள் பாவம். யாத்ரா குணத்தில் என்னைப் போலவே இருக்கிறார். உணவில் மட்டும் அவர் அசைவம். நான் சைவம். மற்றபடி பெரும்பாலும் என்னைப் போன்ற குணம்தான். லிங்காதான் அவங்க அம்மா மாதிரி. அவங்க அம்மா ரொம்பவே உஷார். ஏமாத்தவே முடியாது. அதேபோல்தான் லிங்காவும் வருகிறார். அவர்தான் வளர்ந்த பிறகு என்னை செய்வார் போல" என்றார்.


Click it and Unblock the Notifications











