ஒரேயடியாக இறங்கி வந்த தனுஷ்: மாமா ரஜினி மனசு வைப்பாரா?

By Siva

சென்னை: தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாரா இல்லையா என்பதும் தெளிவாகியுள்ளது.

தனுஷ் படங்களில் நடிப்பது தவிர்த்து தயாரிக்கவும் செய்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். இந்நிலையில் தனுஷ் காலா படத்தை அடுத்து மீண்டும் மாமனார் ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து தனுஷ் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

வுண்டர்பார் பிலிம்ஸ்

வுண்டர்பார் பிலிம்ஸ்

எங்களின் தயாரிப்பு நிறுவனத்தை மூடப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நாங்கள் புதுப்படம் எதையும் அறிவிக்காததால் மக்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் போன்று. பல தயாரிப்பாளர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை தான் தயாரிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு வியாபாரம் சரியில்லை என்று அர்த்தம் இல்லை.

அறிவிப்பு

அறிவிப்பு

நாங்கள் இரண்டு ஸ்க்ரிப்டுகளை உறுதி செய்ய உள்ளோம். விரைவில் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். வெற்றி, தோல்வி என்பது தயாரிப்பில் சகஜம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் போகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி

ரஜினி

ரஜினி சாரை வைத்து நான் படம் தயாரிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ரஜினி சாருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்ய ஆவலாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைக்கு இல்லை. ஏதாவது சுவாரஸ்யமான ஸ்க்ரிப்ட் வந்தால் நிச்சயம் ரஜினி சாரை அணுகுவோம். ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் கனவு. ஒரேயொரு காட்சியில் அவருக்கு பின்னால் நின்றபடி நடித்தால் கூட போதும். பிற மொழி படங்களில் நடிப்பதில் சிரமம் இல்லை. நம்பிக்கை இருப்பதால் தைரியமாக நடிக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் தனுஷ். ஆனால் பாவம் அவரின் ஆசை இதுவரை நிறைவேறாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X