மாமான்னா இப்படி இருக்கணும்.. மாப்பிள்ளைக்கும் அனிகா சுரேந்திரனுக்கும் ரொமான்ஸ் சொல்லித் தரும் தனுஷ்!

சென்னை: தனுஷ், தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் தன்னை நடிகராக மட்டும் இல்லாமல், பாடகராக, பாடல் ஆசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக வெளிக்காட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தனது 50வது படத்தினை தானே எழுதி இயக்கி, ரூபாய் 100 கோடிகள் வசூலும் குவித்துள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படம் வரும் ஆண்டு, காதலர் தினத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் நடிகர்களுக்கு நடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

dhanush neek

இயக்குநர் தனுஷ், தனது முதல் படமான, பவர் பாண்டி படத்தில் தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் தனது இரண்டாவது படமான ராயன் படத்தில், மைய்யக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். அதேநேரத்தில், இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தனுஷ் இந்தப் படத்திலும் நடித்து இயக்குகின்றார். இதில் இவர் நடிக்காத படம் என்றால் அது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்தான்.

dhanush neek

இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வளர்ந்து வரும் நடிகர்களான அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

dhanush neek

வீடியோ: இந்நிலையில் சமீபத்தில் படக்குழு வெளியிட்ட யேடி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் பாடலை தனுஷ் உடன் பாடகி, ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளார். பாடல் ரொமாண்டிக்கான பாடல் என்பதால், இந்தப் பாடலைப் படமாக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக பாடல் காட்சியில் நடிகர்களுக்கு தனுஷ் நடிக்கச் சொல்லித் தரும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

dhanush neek

தாய் மாமா: அதிலும் குறிப்பாக, கதாநாயகனாக, தனது அக்கா மகன் பவீஷ்க்கு இந்தப் பாடலில், அனிகா சுரேந்திரனுடன் எப்படி ரொமான்ஸ் செய்யவேண்டும் என கற்றுக் கொடுக்கும் காட்சிகளும், அனிகா சுரேந்திரனை எப்படி தூக்கிச் சுற்றவேண்டும் எனச் சொல்லித்தரும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. தனது அக்கா பையன், அதாவது தனது, மாப்பிள்ளைக்கு தானே ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என அவரது மாமாவே கற்றுக் கொடுக்கின்றார். தனக்கு தெரிந்த சினிமாவை, தனக்குத் தெரிந்த நடிப்பினை தனது மாப்பிள்ளைக்கு தனுஷ் ரொம்பவுமே ஒரு தாய்மாமனாக கண்ணும் கருத்துமாக கற்றுக் கொடுக்கின்றார் என இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

dhanush neek

அடுத்த படம்: இயக்குநராக தனுஷ் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், நடிகராகவும் செம பிசியாக உள்ளார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படத்தில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடிக்கின்றார். அதேபோல், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

dhanush neek

More from Filmibeat

Read more about: dhanush neek தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X