Tere ishk Mein First Day Box Offie - தனுஷின் தேரே இஷ்க் மே.. முதல் நாள் வசூல் தெரியுமா?.. செம கெத்து
சென்னை: தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேரே இஷ்க் மே திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ராஞ்சனா நூறு கோடி ரூபாய் வசூலித்திருப்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருக்கும் சூழலில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷ் பாலிவுட்டில் முதன்முறையாக நடித்த படம் ராஞ்சனா. 2013ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை இயக்கியது ஆனந்த் எல்.ராய். கண்டிப்பாக தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்று தனுஷால் வெல்ல முடியாது என்றுதான் பலரும் கணித்தார்கள். ஆனால் அவர்களது கணிப்பை பொய்யாக்கி படம் மெகா ப்ளாக் பஸ்ட்ர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. இதனால் தனுஷும் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.
தேரே இஷ்க் மே: சூழல் இப்படி இருக்க மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்க; ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ராஞ்சனா மாதிரியே இந்தப் படமும் மெகா ஹிட்டாகுமா இல்லை தோல்வியடையுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று படம் ரிலீஸானது.

எப்படி இருக்கு படம்?: பெரிய எதிர்பார்ப்பை வைத்து படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்துக்கு வட மாநிலங்களில் போதுமான வரவேற்பு முதல் நாளில் கிடைத்ததாக தெரிகிறது. அதேசமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படத்துக்கும் இதே நிலைமைதான் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
தனுஷின் நடிப்பு சூப்பர்: அதேசமயம் வழக்கம்போல் தனுஷின் நடிப்பு மிக அருமையாக இருந்ததாக படம் பிடிக்காதவர்கள்கூட சொல்லிவருகிறார்கள். ஆங்காங்கே ரஜினியின் சாயல் அவர் நடிப்பில் தெரிந்தாலும் இப்படம் நிச்சயம் தனுஷின் நடிப்புக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள்.மேலும் இதற்காக விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது பலரது கருத்து.
முதல் நாள் வசூல்: இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் தேரே இஷ்க் மே முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இப்படமானது இந்தியாவில் மொத்தம் 16.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருந்தாலும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரெஸ்பான்ஸ் குறைந்ததால் எதிர்பார்த்ததைவிடவும் குறைவான வசூல் பதிவாகியிருக்கிறது. இருந்தாலும் முதல் நாளில் 16 கோடி என்பது ஓரளவுக்கு நல்ல நம்பர்தான் என்பதால் D ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











