Tere Ishk Mein Day 2 Box Office - தனுஷின் தேரே இஷ்க் மே 2வது நாள் வசூல்.. டாப் கியரில் போகுதே
சென்னை: தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகியிருக்கும் தேரே இஷ்க் மே திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ரிலீஸாகி முழு திருப்தியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. அதேசமயம் வழக்கம்போல் தனுஷ் தனது நடிப்பை நல்லபடியாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது.
தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. கடைசியாக அவருக்கு கிடைத்த சூப்பர் ஹிட் என்றால் அது திருச்சிற்றம்பலம் படம்தான். கடைசியாக வெளியான இட்லி கடை, குபேரா ஆகிய இரண்டு படங்களும் நினைத்ததைவிடவும் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் குறைவான ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே படத்தில் கமிட்டானார்.
சக்சஸ்ஃபுல் கூட்டணி: இவர்கள் ஏற்கனவே இணைந்து ராஞ்சனா படத்தில் பணியாற்றியிருந்தார்கள். அதுதான் ஹிந்தியில் தனுஷ் நடித்த முதல் படம். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்து அவருக்கென்று பாலிவுட் மார்க்கெட்டில் ஒரு இடத்தை க்ரியேட் செய்துகொடுத்தது. எனவே இந்த சக்சஸ்ஃபுல் கூட்டணி மீண்டும் இணைந்திருந்ததால் அதே ரிசல்ட் இதிலும் கிடைக்கும் என்று கருதப்பட்டது.

சுமாரான வரவேற்புதான்: ஆனால் அந்த கருத்தெல்லாம் படம் பார்த்த பிறகு சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அரத பழசான கதையை தனுஷ், கீர்த்தி சனோன், ஏ.ஆர்.ரஹ்மான் துணையோடு ரசிகர்களின் தலையில் ஆனந்த் கட்டிவிட்டார் என்று விமர்சனங்கள் வந்தன. கதைதான் பழசு என்றால் திரைக்கதை அதைவிட மோசம்; ராஞ்சனா படத்துக்கு அருகில்கூட இந்தப் படம் செல்லாது என்பது படம் பார்த்த அனைவரின் பேச்சாக இருக்கிறது.
தனுஷின் நடிப்பு ஓகே: படம் ஒருபக்கம் பஞ்சரான வண்டியாக சென்றாலும் தனுஷ் வழக்கம்போல் தனது நல்ல நடிப்பை டெலிவர் செய்திருந்தார். ஆனால் அதிலும் ஒரு குறையை கண்டுபிடித்தார்கள் ரசிகர்கள். அதாவது ஆடியோ லான்ச் மேடைகளில்தான் ரஜினி மாடுலேஷனில் அவர் பேசுகிறார் என்றால்; வர வர படத்திலும் சூப்பர் ஸ்டார் மாதிரியே நடிக்க ஆரம்பித்துவிட்டாரே; ஏன் அவருக்குள் இந்த மாறுதல் என்று கேள்வி கேட்டு அதையும் ட்ரோல் செய்துவருகிறார்கள்.
வசூல் நிலவரம்: தமிழிலும் படம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 16 கோடி ரூபாயை (ஹிந்தியில் 15.75 கோடி, தமிழில் 75 லட்சம்( வசூலித்த அந்தப் படம் இரண்டாவது நாளில் 17 கோடி ரூபாய் வசூலித்து இரண்டு நாட்களில் மொத்தம் 33 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். அந்த இணையதளம் கூறியிருக்கிறது. தென் மாநிலங்களில் படம் விழுந்துவிட்டாலும் வட மாநிலங்கள் படத்தை தூக்கி பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











