தனுஷ் இனிமே நிம்மதியா வேலை பார்க்கலாம்.. அவருக்கு இருந்த அந்த பிரச்சனை ஓவர்.. அறிவிப்பு இதோ!
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்கள் விஷால், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு எதிராக சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தையே எதிர்த்து பேசியிருந்தார். ஆனால், நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு சுமூகமாக அந்த பிரச்சனையை கையாண்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு தற்போது படம் பண்ண மாட்டேன் என அடம்பிடிப்பதாகவும் அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது படங்களுக்கு பெஃப்சி கூட்டமைப்பு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில், சுமூகமாக அந்த பிரச்சனையை நடிகர் தனுஷ் முடித்துக் கொண்டு தனது பட வேலைகளை மீண்டும் துவக்கியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் அறிக்கை: "எனது தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் (திரு முரளி அவர்கள்) மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (திரு கதிரேசன் அவர்கள்) எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையும் எங்களுக்கு உதவியது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிக்கும் ஒரு தீர்வை கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.
உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள் தங்கள் உதவிப் பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக திரு. நாசர் அவர்கள், திரு. கார்த்தி, திரு. விஷால், திரு. கருணாஸ் மற்றும் திரு. பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் தொழில்துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் கைவசம்: ராயன் படத்தை இயக்கி நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications