விஜய் சும்மா பாராட்டமாட்டார்: தேங்க் யூ அண்ணா- தனுஷ்
சென்னை: தன்னை நல்ல நடிகர் என்று பாராட்டிய விஜய்க்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் பிற நடிகர்களின் படத்தை பார்த்து அது நன்றாக இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு பாராட்டுவார். கோலிவுட்டின் முன்னணி நடிகரான அவர் தனுஷ் தன்னை விட சிறந்த நடிகர் என்று மனதில் பட்டதை பட்டென்று தெரிவித்தார்.
விஜய் புகழ்ந்ததையடுத்து வட இந்திய ஊடகங்களும் தனுஷை புகழ்ந்து வருகின்றன. காரணம் ராஞ்ஹனாவில் அவரது எதார்த்தமான நடிப்பு.

விஜய் சும்மா பாராட்ட மாட்டார்
விஜய் தனது வேலையில் நேர்மையாக இல்லாத யாரையும் பாராட்ட மாட்டார். அவர் என்னை பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி விஜய் அண்ணா
தேங்க் யூ விஜய் அண்ணா என்று தன்னை பாராட்டிய இளையதளபதிக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

மரியான்
தனுஷின் மரியான் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராஞ்ஹனா வெற்றியில் இருக்கும் தனுஷ் இந்த படத்தை எதிர்பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











