'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அசுரன் படத்தை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்வாது முறையாக நடித்த படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அசுரனை வெகுவாக பாராட்டியுள்ளார். "அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன், கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்", என அவர் டிவீட் செய்தார்.
பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில், "காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்", என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications