Dhanush: ரொமான்டிக் ஜானரில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... தனுஷ் இயக்கும் ரகசியம் இதுதான்!
சென்னை: தனுஷ் தனது 3வது படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். புது முகங்கள் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவதன் பின்னணி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல் மொத்தமே 40 நாட்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கவுள்ளாராம் தனுஷ்.
தனுஷ் மீண்டும் இயக்குநரானது ஏன்?
தனுஷின் கேப்டன் மில்லர் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதனிடையே தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டி 50 கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதுதான் தனுஷ் இயக்கிய இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். அவரே சொந்தமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் மினிமம் பட்ஜெட்டில் உருவாகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கத்தூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை திடீரென தொடங்கியுள்ள தனுஷ், 40 நாட்களில் எடுத்து முடிக்க பிளான் செய்துள்ளாராம்.
அதாவது, கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்காக தனுஷ் முடி வளர்க்க வேண்டும் என்பதால், இரண்டு மூன்று மாதங்களாவது ஆகும் எனத் தெரிகிறது. அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறாராம். இந்த கதையை தனுஷ் தனக்காக தயார் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனுஷின் பருவம் மாற்றமடைந்துவிட்டதால் அக்கதைக்கு ஏற்ற பருவத்தில் இருக்கும் தன் அக்கா பையனையே நாயகனாக்கியுள்ளார். அதேபோல் ஐஸ்வர்யாவின் தங்கையான செளந்தர்யா ரஜினிகாந்த் தான் இந்தப் படத்தை இயக்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதை நன்றாக இருந்தாலும் நடிகர்கள் தேர்வில் இருந்த குழப்பத்தால் இந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதனை தற்போது தனுஷ் முடிவு செய்துவிட்டதோடு அவரே இயக்கவுள்ளதாகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











