Don't Miss!
- Lifestyle
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
- News
பல கோடி வரி.. ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷின் மேகம் கருக்காதா பாடலின் லுங்கி பாய்ஸ் வெர்ஷன்… என்னங்கடா இப்படி அட்ராசிட்டி பண்றீங்க?
சென்னை: தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.
7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்கு ரசிகர்கள் க்யூட்டாக டான்ஸ் ஆடி இன்ஸ்டா ரீல்ஸில் வைரலாகி வருகின்றனர்.
நானே
வருவேன்..தனுஷ்
ஆபத்தான
ஸ்கிரிப்ட்
ரைட்டர்..செல்வராகவன்
ஏன்
அப்படி
சொன்னார்!

மேஜிக் செய்த DNA கூட்டணி
தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இந்தப் படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதை ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். பெஸ்டிகளை தேடி இளைஞர்களை ஏங்க வைத்தது இந்தப் படம். அதேபோல், 'திருச்சிற்றம்பலம்' படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத்தின் DNA கூட்டணி, மாஸ் காட்டியது. படத்தின் அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

மேகம் கருக்காதா பாடல்
திருச்சிறம்பலம் படத்தில் தாய் கிழவி, மேகம் கருக்காதா ஆகிய பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். இந்நிலையில், மேகம் கருக்காதா பாடலில் தனுஷ் - நித்யா மேனன், தனுஷ் - ராஷி கண்ணா ஜோடி ஆட்டம் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் கோரியோகிராபி செய்திருந்தார். சூப்பரான லைட் மூவ்மெண்ட்ஸ்களுடன் ரொம்பவே க்யூட்டாக உருவாகியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களையும் சிறகடித்து பறக்க வைத்தது.

லுங்கி பாய்ஸ் அட்ராசிட்டி
சிறுசுகள் முதல் இளைஞர்கள், காதலர்கள் என பலரும் இந்தப் பாடலுக்கு ஆடி, இன்ஸ்டா ரீல்ஸில் தெறிக்க விட்டனர். அதேபோல் மேகம் கருக்காதா பாடல் சீனாவிலும் ட்ரெண்ட் ஆனது. சீனாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மேகம் கருக்காதா பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டா, ஃபேஸ்புக் ரீல்ஸ்களில் பிரபலமான லுங்கி பாய்ஸ், இந்தப் பாடலுக்கு வேற லெவலில் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

இதெல்லாம் அநியாயம் மக்களே
மேகம் கருக்காதா பாடலில் தனுஷின் காஸ்ட்யூம் ரிச் லுக்கில் இருக்கும். ஆனால், லுங்கி பாய்ஸ் வழக்கம் போல தங்களது பாணியில் அதகளம் செய்துள்ளனர். பட்டாப்பட்டி டவுசருக்கு மேல் லுங்கியை ஏத்தி கட்டியதோடு, தலையில் ஒரு துண்டையும் கட்டிக் கொண்டு அதே ஸ்டெப்பில் செம்ம க்யூட்டாக ஆடியுள்ளனர். ஸ்டைலிஷான மேகம் கருக்காதா பாடலை, வில்லேஜ் ஸ்டைலில் லோக்கலாக ஆடினால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், மேகம் கருக்காதா பாடலின் லுங்கி பாய்ஸ் வெர்ஷன் செம்ம வைரலாகி வருகிறது.