அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது?
மும்பை: தனுஷ் ஒவ்வொரு முறை பாலிவுட் செல்லும்போது எல்லாம் ஒரு விஷயம் நடப்பதை கவனித்தீர்களா?
ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். முக்கோண காதல் கதை கொண்ட அந்த படத்தில் தனுஷுக்கு சோனம் கபூர் மீது காதல் இருந்தது.

முதல் படத்திலேயே தனுஷ் இறப்பது போன்று காட்டினார்கள். சிக்ஸ் பேக் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பை காட்டி மிரட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தனுஷ். அதன் பிறகு அவர் பால்கியின் இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார்.
இந்நிலையில் தனுஷ் மீண்டும் பாலிவுட் படத்தில் அதுவும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த படத்தில் ரித்திக் ரோஷனும் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ராஞ்சனா படத்தை போன்றே இந்த படத்திலும் முக்கோண காதல் கதையாம்.
ஷாருக்கான், அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோரை வைத்து ஆனந்த் எல் ராய் எடுத்த ஜீரோ படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தான் அவர் முக்கோண காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.
ராஞ்சனா போன்று இந்த படத்திலும் தனுஷ் இறப்பது போன்று காட்சி இல்லாமல் இருந்தால் சரி. தனுஷ் தான் நடித்த முதல் இந்தி படத்தில் நடிகர் அனில் கபூரின் மகளை காதலித்தார் தனுஷ். இரண்டாவது படத்தில் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவின் காதலராக நடித்தார். மூன்றாவது படத்தில் சயிப் அலி கான் மகளின் காதலராக நடிக்க உள்ளார்.
அவர் பாலிவுட் சென்றாலே ஏதாவது ஒரு வாரிசு நடிகையுடன் தான் ஜோடி சேர்ந்து கொண்டிருக்கிறார். இது எதேச்சையாக நடந்தாலும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











