விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைகிறாரா தனுஷ்...என்ன ரோல்...பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்காம்

சென்னை : விஜய், பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடிக்கும் பீஸ்ட் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவிலும், இரண்டாவது கட்ட ஷுட்டிங் சென்னையிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட ஷுட்டிங் சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக பீஸ்ட் படக்குழு ரஷ்யா புறப்பட உள்ளது.

ரஷ்யாவில் க்ளைமாக்ஸ்

ரஷ்யாவில் க்ளைமாக்ஸ்

பீஸ்ட் படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்னா தாஸ், லில்லிபுட் ஃபருகி, அன்குர் அஜித் விகல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லன்கள் பங்கேற்கும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் தான் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளது.

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்

இதற்கிடையில் இந்த படத்தில் டைரக்டர் செல்வராகன் மற்றும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோ ஆகியோர் இணைந்துள்ளதாக கடந்த வாரம் படக்குழு அறிவித்தது. இவர்கள் இருவருமே வில்லன் ரோலில் தான் நடிக்கிறார்களாம். மூன்றாவது வில்லன் யார் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு

மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு

மூன்றாவது வில்லன் யார் என்ற அப்டேட் மிகப் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என கூறப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லன் ரோலில் நடிக்க வைத்ததை போல் மாஸ் ஹீரோ யாரையாவது வில்லனாக நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.

பீஸ்டில் இணையும் தனுஷ்

பீஸ்டில் இணையும் தனுஷ்

லேட்டஸ்ட் தகவலாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷும் இணைய போகிறாராம். தனுஷ் என்ன ரோலில் நடிக்கிறார். ஒருவேளை மூன்றாவது வில்லன் தனுஷ் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் தனுஷ் நடிக்க போவதில்லையாம்.

இது தான் பண்ண போறாரா

இது தான் பண்ண போறாரா

அதற்கு பதில் பாடல் எழுதி, பாட்டும் பாட போகிறாராம் தனுஷ். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனும் பாடல் எழுதுவதாக ஏற்கனவே கூறப்பட்டது. துற்போது தனுஷும் அவருடன் இணைந்துள்ளார். விஜய் படத்தில் தனுஷ் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் ப்ளசாக பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

விரைவில் இணையும் விஜய்

விரைவில் இணையும் விஜய்

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட ஷுட்டிங்கில் கடந்த வாரம் முதல் டாம் சாகோவும் இணைந்துள்ளார். பூஜா ஹெக்டேவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். விரைவில் விஜய்யும் இணைவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X