twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷ்.. வெங்கட்பிரபு போட்ட வாழ்த்து டிவீட்டால் பரபரப்பு!

    மாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷ் நடிக்க இருப்பதாக மறைமுகமாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

    |

    சென்னை: சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாநாடு படத்தில் சிம்புவுக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

    சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகர் சிம்பு. படப்பிடிப்புக்கு வராமல் தவிர்க்கிறார், தாமதமாக வருகிறார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உண்டு. இதன் காரணமாகவே பல நல்ல படங்களை இழுந்தார் சிம்பு. சமீபகாலமாக தான் தன் மீது இருந்த கெட்டப் பெயரை கொஞ்சம் கொஞ்சமாக சிம்பு மாற்றி வந்தார்.

    செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் எனும் தகவலும் ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏனெனில் சிம்புவை வைத்து பில்லா படத்தினை ரீமேக் செய்ய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

    'அன்பு எப்போதுமே அனாதைதான்'.. அபியிடம் தேம்பித்தேம்பி அழுத முகென்.. திரும்பவும் முதல்ல இருந்தா? 'அன்பு எப்போதுமே அனாதைதான்'.. அபியிடம் தேம்பித்தேம்பி அழுத முகென்.. திரும்பவும் முதல்ல இருந்தா?

    தாமதமான மாநாடு

    தாமதமான மாநாடு

    அப்படம் தயாராகாவிட்டாலும், வெங்கட்பிரபுவின் இயக்கத்திலாவது சிம்பு நடிக்கிறாரே என ரசிகர்கள் திருப்தியடைந்தனர். படத்திற்கு மாநாடு என பெயர் வைக்கப்பட்டதால், நிச்சயம் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக அப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    சிம்பு நீக்கம்

    சிம்பு நீக்கம்

    ஆனால் பட அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் படப்பிடிப்பே தொடங்கவில்லை. இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தார் சிம்பு. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

    சிம்புவின் மகா மாநாடு

    சிம்புவின் மகா மாநாடு

    இதையடுத்து, சிம்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் மகா மாநாடு எனும் படத்தை தானே தயாரித்து இயக்கப் போவதாக சிம்பு அறிவித்தார். சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் கோடம்பாக்கமே அதிர்ந்தது. நேற்று முதல் இது தான் கோடம்பாக்கத்தின் பேசு பொருளாக இருந்தது.

    வெங்கட்பிரபு டிவீட்

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர தின வாழ்த்து கூறிய வெங்கட் பிரபு, "வம்பை வளர்க்காமல், அன்பை வளர்ப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

    ஏதோ குறியீடு

    இதை பார்த்த ரசிகர்கள், வெங்கட்பிரபு ஏதோ குறியீடோடு இந்த பதிவை போட்டிருப்பதாக உணர்கின்றனர். "வம்பு என்றால் சிம்பு. அன்பு என்றால் தனுஷ். அதாவது வடசென்னை படத்தில் அவர் பெயர் அன்பு. எனவே மாநாடு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதை தான் அவர் மறைமுகமாக கூறுகிறார்" என ஒரு வம்புக்கார ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

    கைமாறிய வடசென்னை

    கைமாறிய வடசென்னை

    ஏற்கனவே வடசென்னை படத்தின் கதையை சிம்புவிடம் தான் முதலில் கூறினார் வெற்றிமாறன். அந்த படத்தில் சிம்பு நடிப்பது முடிவான நிலையில், வழக்கமான காரணங்களால் படம் தள்ளிபோனது. ஒருகட்டத்தில் படத்தை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதன் காரணத்தினால் தான், அந்த படத்தை தனுஷே தயாரித்து நடித்தார். அதுபோல தான் மாநாடு படத்தின் கதையும் மாறியுள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.

    English summary
    In his Independence day tweet director Venkatprabhu hinted that Dhanush will be playing the lead in Maanadu, instead of Simbu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X