இனிமே எல்லோரும் தனுஷை சூப்பர் சுருளி.. சூப்பர் சுருளின்னே கூப்பிடலாம்!
Recommended Video
சென்னை: தனுஷுக்கு எங்கே இருந்துதான் இப்படி லட்டு கணக்கா டைட்டில் கிடைக்கிறதோ.. சுருளி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கப் போகிறாராம்.

இன்றைய சினிமா டிட்பிட்ஸ் உங்களுக்காக...
இந்தியன் 2 ரெடி ஆகி வருகிறது. கமல் ரசிகர்கள் மாபெரும் விருந்துக்காக காத்துக் கொண்டுள்ளனர். அடுத்து மருதநாயகம் எப்போது என்று கமலிடம் கேட்க ஆரம்பித்து விட்டனர். அவரும் வரும்.. ஆனால் நான் அதில் இருப்பேனா என்று தெரியாது என்று பதிலளித்து வருகிறார்.
கமல் இப்படத்தில் மருதநாயகம் கேரக்டரில் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். அவருக்குப் பதில் விக்ரம் நடிக்கலாம் என்று டாக் ஓடிக் கொண்டுள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மணிரத்தினம் தனது சக்தியையும் மீறிய மிகப் பெரிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். பொன்னியன் செல்வன். இடையில் வானம் கொட்டட்டும் என்ற படத்தையும் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு நடித்துள்ள படம். கூடவே ராதிகாவும், சரத்குமாரும் இணைந்துள்ளனர். படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் படமாக இருக்கும் என்று சொல்லி படத்தை வளர்த்து வருகின்றனர்.
ஆர்.கே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கவிருப்பது பழைய செய்தி. புதுச் செய்தி, மீண்டும் ஒரு படத்தில் பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறாராம். அதில் அவருக்கு போலீஸ் அதிகாரி கெட்டப்பாம். இதே நயன்தாராதான், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க மறுத்திருந்தார். ஆனால் பாலாஜி படத்துக்கு மட்டும் காக்கியை கையில் எடுத்துள்ளார்.!
அசுரனில் அசத்திய தனுஷ் அடுத்து யார் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணன் செல்வராகவன் ரொம்ப நாளாக தனுஷுக்காக காத்திருக்கிறார். ஆனால் அவரை ஓரமாக உட்கார வைத்து விட்டு பைபாஸில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். அடுத்து கார்த்திக் சுப்புராஜின் சுருளி படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து மாரி செல்வராஜ் படம் காத்திருக்கிறதாம். அடுத்தடுத்து படங்களில் தனுஷ் நடித்திருப்பதால் செல்வா யோசனையாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











