சிவகார்த்திகேயன் பற்றி அன்றே சொன்ன தனுஷ்: இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான நினைவுகள்!

சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

Recommended Video

இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்யமான நினைவுகள்!

சிவகார்த்திகேயனின் ஆரம்பகால வளர்ச்சிக்கு நடிகர் தனுஷும் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்தியேனின் திறமையை பற்றி தனுஷ் கூறியதை இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.

சின்னதிரை டூ வெள்ளிதிரை

சின்னதிரை டூ வெள்ளிதிரை

விஜய் டீவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம், மக்களிடம் அறிமுகமான சிவகார்த்திகேயன், மெல்ல மெல்ல சினிமா பக்கம் அடியெடுத்து வைத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு, தன்னுடன் ‘3' படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனுஷ் கொடுத்தார். அதுமட்டும் இல்லாமல், தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்' படத்தின் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

நண்பர்களான தனுஷ், சிவகார்த்திகேயன்

நண்பர்களான தனுஷ், சிவகார்த்திகேயன்

'3', ‘எதிர் நீச்சல்' என அடுத்தடுத்து ஒன்றாக பயணித்த தனுஷும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாகினர். இவர்களுடன் ராக்ஸ்டார் அனிருத்தும் நெருக்கமானார். ஒருகட்டத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மூவரும் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தலையைக் காட்டி வந்தனர். மேலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் புகழ்மாலையும் சூடிக்கொண்டனர்.

யார் கண்ணுபட்டுச்சோ தெரியல?

யார் கண்ணுபட்டுச்சோ தெரியல?

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதனால், அவரது சம்பளமும் கோடிகளில் உயர்ந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை தன்னுடையே பேனரில் நடிக்கவைக்க, தனுஷ் முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தனுஷிடமே சிவகார்த்திகேயன் கோடிகளில் சம்பளம் கேட்டதால், இருவருக்குள்ளும் மனவருத்தம் ஏற்பட்டதாக, தகவல்கள் வெளியாகின.

சிவகார்த்திகேயனுக்காக கதை கேட்ட தனுஷ்

சிவகார்த்திகேயனுக்காக கதை கேட்ட தனுஷ்

ஆனால், சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் கதை கேட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனை இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அதில், "திடீரென ஒருநாள் தனுஷ் தன்னிடம், உங்களது அஸிஸ்டெண்ட் யாராவது காமெடி கதை வைத்திருந்தால் சொல்லச் சொல்லிக் கேட்டார்." நான் தனுஷிடம் "உங்களுக்கு காமெடி கதைகள் புடிக்குமா?" எனக் கேட்டேன். ஆனால், அவரோ "அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு தேவை" என சொன்னதாகக் கூறியுள்ளார்.

அன்றே கணித்த தனுஷ்

அன்றே கணித்த தனுஷ்

தொடர்ந்து பேசிய அவர், "சிவகார்த்திகேயன் செம்ம திறமையான நடிகர் என்றும், அவரிடம் சூப்பர் ஸ்டார் ஆகும் அளவிற்கு எல்லா தகுதிகளும் திறமைகளும் இருக்கு சார்" என தன்னிடம் தனுஷ் சொன்னதாக, வெற்றிமாறன் கூறியுள்ளார். இதனை வரவேற்றுள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், மீண்டும் இருவரும் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 'திருச்சிற்றம்பலம்' ஆடியோ ரிலீஸின் போது வெற்றிமாறன் பேசியிருந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X