அச்சு அசல் அப்படியே இளையராஜாவாகவே மாறிய தனுஷ்.. தீயாக பரவும் புகைப்படம்.. அருண் மாதேஸ்வரன் சம்பவம்!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இளையராஜா படத்தின் அறிவிப்புடன் நடிகர் தனுஷ் லுக்கிங் பின்னாடி திரும்பி இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. நிலையில் இளையராஜா போலவே நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இறுதி செய்யப்பட்டு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

பயோபிக் படங்கள்: பாலிவுட்டில் தோனியின் பயோபிக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்போது 200 கோடி ரூபாய் மேல் அந்த படம் வசூல் ஈட்டியது. அதன் பின்னர் ஏகப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், நடிகர்களின் பயோபிக் படங்கள் உருவாகி வந்தன. ஆனால் அந்த படங்கள், எதுவும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. தமிழில் வெளியான தலைவி திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜாவாக தனுஷ்: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜா வாக நடிக்க உள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தான் தன்னை இதுவரை தனிமையில் இருந்து காத்து வந்தது என்றும், வழிநடத்தியது என்றும், அவரது பாடல்கள் தான் நான் நடிக்கவே உறுதுணையாக இருந்தது என்றும் தனுஷ் உருக்கத்துடன் பேசினார். கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இளையராஜா பயோபிக் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கைவசம் ஏகப்பட்ட படங்கள்: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அதன் பின்னர் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து குபேரா எனும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக, இளையராஜா படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
இசை யாரு?: இளையராஜா படத்தின் டைட்டில் "இளையாராஜா" தானா என்றும் அந்த படத்திற்கு இசை யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இளையராஜாவே அவரது படத்துக்கு இசையமைத்தால் தான் சரியா இருக்கும் என்றும் அதுதான் நடக்கப் போகுது என்றும் இளையராஜா என்பதே படத்திற்கு சரியான தலைப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இளையராஜா லுக்கில் தனுஷ்: இளம் வயதில் இளையராஜா எப்படி இருந்தாரோ அதே போன்ற லுக்கில் தனுஷ் இருக்கும் படம் ஒன்று இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? அல்லது ஒரிஜினல் போட்டோவா என்றே தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் அதை ஷேர் செய்து வருகின்றனர். இதே அளவு தோற்றத்துக்கு நடிகர் தனுஷால் மட்டுமே மாற முடியும் என்றும் வயதான தோற்றத்தில் தனுஷ் லுக் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











