வேட்டையாடும் ரஜினியின் வேட்டையன்.. மருமகன் தனுஷ் என்ன சொல்லிருக்காரு பாருங்க

சென்னை: வேட்டையன் படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. என்கவுன்ட்டருக்கு எதிரான படம் என்று மட்டும் பலரும் எண்ணியிருந்த நிலையில் கல்வியில் நடக்கும் ஊழல் உள்ளிட்ட சமூகத்துக்கு தேவையான விஷயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் ஞானவேல். ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில் ரஜினியின் மருமகன் தனுஷ் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக லால் சலாம், ஜெயிலர் படங்கள் வெளியாகின. அந்தப் படங்களில் ஜெயிலர் மெகா ஹிட்டடித்தது. அதனையடுத்து இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் அமிதாப் பச்சன், முதன்முறையாக ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

rajinikanth vettaiyan dhanush

மாஸ் ரெஸ்பான்ஸ்; மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியானது. ரஜினியை வைத்து ஞானவேல் எந்த மாதிரியான சம்பவம் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு படத்துக்கு சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே படத்தில் பல விஷயங்கள் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸாக இருக்கின்றன. ரஜினி என்ற மிகப்பெரிய மாஸ் ஹீரோவை வைத்து ஞானவேல் இயக்கினாலும் தன்னுடைய ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கிலிருந்து விலகவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி: தனது ஸ்டைலில் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை ஞானவேல் வைத்தாலும் ரஜினிக்கு தேவையான மாஸ் சீன்களையும் வைப்பதற்கு அவர் தவறவில்லை. பல சீன்களில் ரஜினிகாந்த் வரும்போது அனிருத்தின் இசையும், ஞானவேலுவின் மேக்கிங்கும் பட்டையை கிளப்புவதால் ரசிகர்கள் திருவிழா போல் தியேட்டருக்கும் கொண்டாடிவருகிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே மனசிலாயோ பாடல் வந்து ரசிகர்களை வைபிலேயே வைத்திருக்கிறது.

துஷாரா முக்கியம்: ரஜினி நடிப்பை தாண்டி படத்தில் ஃபகத் பாசிலும், துஷாராவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அதிலும் துஷாராவின் கதாபாத்திரம்தான் படத்தில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனை உணர்ந்து அவரும் தனது நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். அதேபோல் ஃபகத்தை தமிழில் இதுவரை சீரியஸாக மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு வேட்டையன் புது அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இப்படி படத்தின் எல்லா ஏரியாவிலும் ஞானவேல் பக்காவாக வேலை செய்திருக்கிறார்.

தனுஷ் ட்வீட்: இதன் காரணமாக படம் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் மருமகன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டையன் பற்றி ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வேட்டையன் தலைவர் தரிசனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இப்போது தனுஷும் இந்த மாதிரியான ட்வீட் போட்டிருப்பதால் அவர்கள் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X