ரஜினிக்கு வாழ்த்து சொன்ன மகள் ஐஸ்வர்யா.. தனுஷ் என்ன செஞ்சாரு தெரியுமா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: ரஜினிகாந்த் நேற்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி படையப்பா படமும் ரீ ரிலீஸ் ஆனதால் அவர்களுக்கு நேற்று டபுள் ட்ரீட். இது ஒருபக்கம் இருக்க ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது தந்தைக்கு எமோஷனலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். சூழல் இப்படி இருக்க தனுஷ் செய்த செயல் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் காதல் கொண்டேன் பட சமயத்தில் பழக ஆரம்பித்தார்கள். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற; நீண்ட யோசனை, ஆலோசனைக்கு பிறகு தனுஷுக்கு தங்கள் மகளை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார்கள் ரஜினியும், லதாவும். அவர்களது திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்தது. இருவருக்கும் நடந்த திருமணத்தை பார்த்து பொறாமைப்பட்டவர்களும், ஆச்சரியப்பட்டவர்களும்தான் அதிகம். ஏனெனில் அந்த சமயத்தில் தனுஷ் இந்த அளவுக்கு மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர் இல்லை.

சுமூகமான வாழ்க்கை: திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக அவர்கள் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாவின் இயக்குநர் கனவுக்கு தனுஷ் தனது சப்போர்ட்டை வழங்கினார்; அதேபோல் தனுஷின் நடை, உடை, பாவனை, பேசும் விதம் என அத்தனையையும் ஐஸ்வர்யா மேம்படுத்தியதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Dhanush Unexpected Reaction to Aishwarya Rajinikanth s Birthday Post for Rajinikanth Goes Viral
Photo Credit:

விவாகரத்து பெற்ற ஜோடி: நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்னைகள் வர ஆரம்பித்தன. அதற்கு யார் காரணம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். எப்படியும் இப்பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். இரண்டு மகன்களையும் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்கிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் நேற்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தனுஷும் முதல் ஆளாக நேற்று தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் ரஜினிக்கு கேக் ஊட்டிவிடும் புகைப்படத்தோடு தன்னுடைய வாழ்த்தை கூறியிருந்தார்.

தனுஷ் செய்த செயல்: அவர் தன்னுடைய வாழ்த்தில் என் உயிர்.. என் அப்பா.. பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தனுஷ் செய்த செயல் ஒன்று ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். அந்த வாழ்த்து போஸ்ட்டுக்கு தனுஷ் லைக் போட்டிருந்தார். அவர் மட்டுமின்றி அவரது மேனேஜர் ஸ்ரேயாஸும் லைக்கிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ விவாகரத்து ஆனாலும் ஐஸ்வர்யாவின் செயல்களுக்கு தனுஷ் ரெஸ்பான்ஸ் செய்கிறாரே; பேசாமல் மகன்களுக்காக மீண்டும் இணைந்து வாழ்ந்தால்தான் என்ன என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X