»   »  முற்றும் மோதல்: ட்விட்டரில் அனிருத்தை ஃபாலோ செய்வதை நிறுத்திய தனுஷ்

முற்றும் மோதல்: ட்விட்டரில் அனிருத்தை ஃபாலோ செய்வதை நிறுத்திய தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், அனிருத் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ரஜினியின் உறவுக்கார பையனான அனிருத். அந்த படத்தில் தனுஷை ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பாட வைத்து இருவரும் உலகம் முழுவதும் பிரபலம் ஆகினர்.

யாருடா இந்த பையன் பார்க்க சுள்ளான் மாதிரி இருந்து நல்லா இசையமைக்கிறாரே என்று பலரும் அனிருத்தை கவனிக்கத் துவங்கினர்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ், அனிருத் இடையேயான நட்பு நெருக்கமானது. தனுஷ் படங்களில் தொடர்ந்து அனிருத்துக்கு வாய்ப்புக் அளிக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மாரி

மாரி

தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், அவர் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். அவரது இசையில் பாடல்களும் ஹிட்டாகின. அனிருத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார் தனுஷ்.

பிரிவு

பிரிவு

மாரியை அடுத்து தனுஷ் அனிருத்தை ஒதுக்கத் துவங்கினார். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தனுஷ் அனிருத்துக்கு வாய்ப்பு தருவது இல்லை என்று கூறப்பட்டது.

ட்விட்டர்

ட்விட்டர்

ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த அனிருத்தும், தனுஷும் தற்போது சரியாக பேசிக் கொள்வது கூட இல்லையாம். இந்நிலையில் தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார். ஆனால் அனிருத் தனுஷை இன்னும் ஃபாலோ செய்கிறார்.

சிம்பு

சிம்பு

அனிருத் சிம்புவுடன் நெருக்கம் காட்டியது தனுஷுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் பீப் பாடல் வெளியாகி அனிருத்தின் பெயர் கெட்டது. மேலும் தனுஷுக்கு ஆகாத சிவகார்த்திகேயனுடன் அனிருத் நெருக்கமானார். அதுவும் தனுஷை எரிச்சல் அடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush who was close to music director Anirudh has unfollowed him on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil